செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமருடன் சந்திப்பு

செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அவரது உறுதிப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய திரு மோடி, அவரது நம்பிக்கை  ஊக்கமளிப்பதாகக் கூறினார். இன்றைய உரையாடல் யோகா, தியானத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைப் பற்றி இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:”இந்தியாவின் பெருமையாக விளங்கும் செஸ் சாம்பியனான குகேஷுடன் ஒரு சிறந்த கலந்துரையாடல் அமைந்தது!நான் இப்போது சில ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரிடம் என்னை மிகவும் கவர்வது அவரது உறுதியும் அர்ப்பணிப்பும். அவரது தன்னம்பிக்கையும் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு வீடியோவைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அதில் இளைய உலக சாம்பியனாக மாறுவேன் என்று அவர் கூறி இருந்தார். இந்த கணிப்பு இப்போது நடந்துள்ளது. அவரது முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.””தன்னம்பிக்கையுடன், குகேஷ் அமைதியையும் பணிவையும் கொண்டுள்ளார். வெற்றி பெற்றவுடன், அவர் அமைதியாக இருந்தார். கடினமாக சம்பாதித்த இந்த வெற்றியை எவ்வாறு கொண்டாடுவது என்பதை முழுமையாக புரிந்துகொண்டு தமது புகழில் மூழ்கினார். இன்று எங்கள் உரையாடல் யோகா, தியானத்தின் மாற்றத்தை  ஏற்படுத்தும் திறனைச் சுற்றியும் இருந்தது.””ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வெற்றியிலும், அவர்களின் பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கடினமான, முயற்சிகள் மூலம் அவருக்கு ஆதரவளித்த குகேஷின் பெற்றோரை நான் பாராட்டினேன். அவர்களின் அர்ப்பணிப்பு விளையாட்டைத் தொடர கனவு காணும் எண்ணற்ற இளம் ஆர்வலர்களின் பெற்றோருக்கு ஊக்கமளிக்கும்.””குகேஷிடமிருந்து அவர் வென்ற விளையாட்டின் அசல் சதுரங்கப் பலகையைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரும் டிங் லிரெனும் கையெழுத்திட்ட சதுரங்கப் பலகை ஒரு நேசத்துக்குரிய நினைவுப் பரிசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமருடன் சந்திப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube