ஜப்பானுக்கு தொழிலாளர்களை அனுப்புவது குறித்து மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் பயிலரங்குக்கு ஏற்பாடு..

தொழில்நுட்ப பயிற்சித் திட்டம் மற்றும் குறிப்பிட்ட திறன்களைக் கொண்ட தொழிலாளர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் திறமையான நபர்களை ஜப்பானுக்கு அனுப்புவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஒரு விரிவான உரையாடலை நடத்துவதற்கும் அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதற்கும், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு சிந்தனைப் பயிலரங்கை தில்லியில் ஏற்பாடு செய்தது. இதற்கு திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் அதுல்குமார் திவாரி தலைமை வகித்தார். வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அனுராக் பூஷண் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர்.

பணியாளர்களை அனுப்பும் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காணவும் நிவர்த்தி செய்யவும், அந்தந்த திட்டங்கள் தொடர்பான கள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கண்காணிப்பு நடைமுறைகளை ஆராயவும், தீர்வு சார்ந்த விவாதங்களில் ஈடுபடவும் இந்த அமர்வு ஒரு தளத்தை வழங்கியது.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் அதுல் குமார் திவாரி, இந்தியாவை உலகின் திறன் தலைமை இடமாக மாற்றுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதில் இந்த துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். எதிர்காலத்திற்கான பயனுள்ள செயல்திட்டங்களை உருவாக்க உதவும் வகையில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கு இது போன்ற பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்வது முக்கியம் என்று அவர் மேலும் கூறினார்.

வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அனுராக் பூஷன், ஜப்பானிய சந்தையில், வாய்ப்புகளைப் பயன்படுத்த ஒரு நுணுக்கமான அணுகுமுறை மிக முக்கியமானது என்றார். தேவையான மொழித்திறன்களை உருவாக்குதல், வலுவான மொழி பயிற்சி கட்டமைப்புகளை உருவாக்குதல், குடியேற்ற கொள்கைச்சூழல் அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் முன்னேற்றங்களை ஏற்று செயல்படுதல் ஆகியவை இளம் தொழிலாளர்களின் திறமையைப் பயன்படுத்த உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.