ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல்

புதுச்சேரி:
புதுவை அரும்பார்த்தபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் வினோத் (வயது 34). ஜிப்மரில் இளநிலை எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (30). வினோத்தும், அவரது அண்ணன் சம்பத்தும் சேர்ந்து புதுவை காமராஜர் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் வினோத்துக்கும், அவரது மனைவியின் சகோதரர் வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களாக சத்ரியன், சிலம்பு, கவியரசன் ஆகியோர் மதுபோதையில் வினோத்தின் ஓட்டலுக்கு வந்து பிரியாணி கேட்டனர். அதற்கு அவர் பிரியாணி இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் வினோத்தை தாக்கினர். மேலும் கடையில் இருந்து பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வினோத் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், கவியரசன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டு 7 பேர் உயிரிப்பு: அமைச்சர் அருண்ராஜ்

சென்னை:தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவது வழக்கமாக

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து தமிழக முதல்வர் விஜய் அவசர ஆலோசனை

சென்னை, நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டசபையில் சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு

திடீர் வெள்ளத்தால் பாதித்த நேபாள்: 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில்