ஜெர்மன் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய சர்வதேச முதுநிலை பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ள சென்னை ஐஐடி

ஜெர்மனைச் சேர்ந்த ஆர்டபிள்யுடிஎச் ஆச்சென், (RWTH Aachen), டியு ட்ரெஸ்டென் (TU Dresden) ஆகிய இரு பல்கலைக்கழகங்களுடன் இணைந்தும், ஏஐடி பாங்காக், யுஎன்யு ஃபுளோரெஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியோடு ‘நீர்ப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மாற்றம் குறித்த  புதிய கூட்டு முதுநிலைப் படிப்பை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தொடங்கியுள்ளது. 

இந்த பாடத்திட்டம் மூன்று பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் படிப்புகளை கவனிக்கும். மாணவர்கள் சென்னை ஐஐடி-இல் கல்வியாண்டைத் தொடங்குவார்கள். ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டரைத் தொடர்வார்கள். தாங்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வறிக்கையை தயாரிக்க வாய்ப்பளிக்கப்படும்.

இந்த பாடத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2024 ஏப்ரல் 30 கடைசி நாளாகும். முதல் தொகுப்புக்கான வகுப்புகள் 2024 ஜூலை 29 முதல் தொடங்கும். ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். https://abcd-centre.org/master-program/

இந்த பாடத்திட்டம் குறித்துப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, “நீடித்த வளர்ச்சி இலக்குகளின் குறிக்கோள்களை எட்டுவதற்கு, மனித ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுக்கும்போது எந்தவொரு நாட்டிற்காகவும் அல்லாமல் உலக அளவில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டும் நோக்கிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார்.

மாணவர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை இந்தப் படிப்பு வழங்குவதுடன், உலகளாவிய சுற்றுச்சூழலில் நீர்ப் பாதுகாப்பு சவால்களை சமாளித்தல் மற்றும் காலநிலைப் பிரச்சனைகளை சமாளிப்பது குறித்தும் கற்பிக்கப்படும். குறிப்பிட்ட பொறியியல் பின்னணியைக் கொண்ட இந்திய மற்றும் சர்வதேச மாணவ-மாணவிகள் இந்த முதுநிலைப் படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

புதிய படிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி டீன் (குளோபல் என்கேஜ்மெண்ட்) பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி கூறும்போது, இதுபோன்று சர்வதேச படிப்பை தொடங்கியிருப்பது இதுவே முதன்முறையாகும். இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இந்தப் படிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஆர்டபிள்யுடிஎச் ஆச்சென் பேராசிரியர் ஹோல்கர் ஷுட்ரம்ப், “தண்ணீரை வைத்துத்தான் காலநிலைத் தழுவல் தொடங்குகிறது. இந்த சவாலை சமாளிக்க இரு கண்டங்களில் உள்ள மூன்று நாடுகளில் இடம்பெற்றுள்ள நான்கு பிரபல பல்கலைக்கழகங்களைக் கொண்டு உலகளாவிய கூட்டுமுயற்சி முதுநிலைப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. காலநிலைத் தழுவல் அறிவியலில் எதிர்காலத்தில் முன்னணியில் திகழ்வதற்கு உந்துதல் பெற்ற மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்” என்றார்.

டியுடி பல்கலைக் கழக சிவில் என்ஜினியரிங் டீன் மற்றும், ஹைட்ராலிக் என்ஜினியரிங் தலைவருமான பேராசிரியர் ஜுர்கன் ஸ்டாம் கூறும்போது, நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள பொருத்தமான உத்திகள் மற்றும் தழுவல் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. எங்களின் கூட்டு முதுநிலைப் படிப்பின் மூலம் மனிதகுலத்துக்கும், இயற்கைக்கும் நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சூழலில் தலைமை வகிக்க முடியும்” என்றார்.

பல்துறை முதுகலைப் படிப்பில் ஆர்வமுள்ள உயர்நிலை சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்காக இந்த இரண்டாண்டு பாடத்திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களை பின்வரும் இணைப்பில் காணலாம். https://ge.iitm.ac.in/I2MP/#popular-programs

பொறியியல்/தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் அல்லது அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச