தனியார் பள்ளியை விட மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் எம்.சி.என். ப்ரைமரி ஸ்கூல்

தனியார் பள்ளியை விட மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் எம்.சி.என். ப்ரைமரி ஸ்கூல்

தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தரும் அரசுப் பள்ளி

சென்னை, ஜூன்.23 அன்று

சென்னை, திநகரிலுள்ள ஹபிபுல்லா சாலையில் எம்.சி.என். ப்ரைமரி ஸ்கூல் என்ற அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள்.

தினமும் காலை சுவையான சிற்றுண்டியும், மதியம் ஆரோக்கியமான சாப்பாடும் முட்டையுடன் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வடமாநிலத்தைச் சேர்ந்த தமிழ் மொழி தெரியாத பல மாணவர்கள் இங்கு கல்வி கற்று தமிழ்மொழியில் தற்போது சரளமாக உரையாடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், சிறு வயதிலேயே மாணவர்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது மாணவர்களுக்கு கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்த அரசுப் பள்ளி தனியார் பள்ளியை விட மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து தி.நகர் பார்த்தசாரதிபுரத்தைச் சேர்ந்த பாலசங்கர்-மகேஸ்வரி தம்பதிகள் கூறுகையில்,

எங்கள் மகன் ஹர்ஜித்தை எம்.சி.என். பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்த்திருக்கிறோம். ஒருநாள் எங்கள் மகனை அழைத்துச் செல்ல வந்தபோது என் மகன் சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவுடன் எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இது பற்றி ஆசிரியரிடம் கேட்டபோது, நாங்கள் தற்காப்புக் கலைகளான சிலம்பம், கராத்தே ஆகியவை கற்றுத் தருகிறோம்.

இதற்கென்றே தற்காப்புக் கலை வல்லுநர் வந்து சிலம்பம் மற்றும் கராத்தே கற்றுக் கொடுக்கிறார் என்றார். அப்பொழுதுதான் இந்தப் பள்ளி இவ்வளவு சிறப்பாக செயல்படுவது தெரிந்தது. பல பேருக்கு இது தெரியாததால் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள். ஆனால் தனியார் பள்ளியை விட தி.நகரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த எம்.சி.என். பள்ளி’’ என்றனர் பாலசங்கர்-மகேஸ்வரி தம்பதியினர்.

பிற மாநிலத்தைச் சேர்ந்த தமிழ் தெரியாத பல குழந்தைகள் இங்கு சேர்க்கப்பட்டு அவர்கள் தமிழ் மொழியில் சரளமாக பேச, எழுத கற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்