அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

தமிழர் திருநாளாம்.. தைப்பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!***உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்..

தமிழர் திருநாளாம்.. தைப்பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!***உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்..
என்கிறது நம் திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை.உலகம் எதை நம்பி வாழ்கிறது என்றால்.. அது அன்றும் இன்றும் நாளையும் என முக் காலத்திலும் உழவு செய்து அதில் விளையும் உணவு வகைகளை வைத்தே வாழ்கிறது என்பதே முழுமையானது. அதனை முன் மொழிந்தே வாழ்வது என்பதும் அதற்கென இருக்கும் மண்ணை வணங்கியும் அதற்கு ஆதாரமாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவித்தும் அதற்கென உழைக்கும் மாடுகளுக்கு என சிறப்புகள் செய்யவும் என பலநாள் விழா அமைத்து அதனை புத்தரிசியில் பொங்கல் வைத்து, பொங்கலென்றும் மாட்டுப் பொங்கல் எனவும் கொண்டாடி வருவது தமிழர் பண்பாடாகி இருப்பது நமக்கு பெருமையளிக்கிறது.உலகில் தமிழர் நம்மை முன்னிருத்தி பேசுவதற்கு சில காரணங்களாக.. நம் தாய்மொழித் தமிழும் இன்றைய எண் கணக்கு வடிவங்களாக உலகின் புழக்கத்தில் இருப்பதும் நமது வடிவங்களே என்பதாலும் மட்டுமல்லாது, அழகிய ஒழுக்க நெறிமுறைகளை அடுக்கடுக்காக தன்னுள் வைத்து தொன்றுதொட்டு வாழும் குடி தமிழர்கள் நாம் என்பதாலுமே! அதற்கு மேலும் ஒரு சிறப்பு எடுத்துக்காட்டு என்பது போல வயல் விளைந்த நெல்லையும் புல்லையும் இரு பங்குகளாக மாட்டிற்கும் மக்களுக்கும் என இரு பங்கென அளித்து அதனை கொண்டாடி வருவதும் உயிரினங்களின் மேல் தமிழர் நமக்கு இருக்கும் அன்பையும் அது பறைசாற்றி அறிவிக்கின்ற திருவிழாவாகவும் பொங்கல் இனிக்கிறது.நாம் எந்த ஒரு நாளையும் புத்தாடை அணிந்து கொண்டாடி மகிழ ஒரு தொடக்கம் செய்ததும் பொங்கல் விழாவே! பழையன கழிந்து புதியன பூக்க மார்கழியின் கடைசி நாளை போகி என பழையனவற்றை கழித்து அனுப்பிவிட்டு தைத்திங்கள் பிறப்பை புத்தாடை அணிந்து வரவேற்பது எனவும் இருப்பது நம் முன்னோர்களின் அறிவிற்கும் தெளிவிற்கும் மணிமகுடம் சூட்டியது போல் ஆகிறது.நமக்கு வாழ்வளிக்கும் இயற்கை அன்னையை போற்றி பாதுகாக்கத் தூண்டும் பொங்கல் திருநாள்! ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் போல.. அமைந்து உள்ளது.தை பிறந்தால் வழி பிறக்கும்.. என்பது ஒரு முதுமொழி.இது ஆடியில் தொடங்கிய உழவுக்கும் வேலைகளுக்கும் மார்கழியில் அறுவடை முடித்து விளைச்சலை வீடு கொணர்ந்து சேர்த்து, அடுத்து இளையோருக்கு திருமணம் முடித்தல் என்ற அடுத்த கட்ட பணிகளை தொடர்வதெனவாய் இருந்தது. காலப் போக்கில் இன்றும் பேசப்படும் சொல்லாக இருக்கிறது. இப்படி தமிழர் நமக்கு உழைப்பையும் வாழ்க்கையும் உயர்த்தி பிடித்து அதன் வழியாக மக்களின் ஆசைக் கனவுகளை நிறைவேற்ற தொடங்கும் வழிவழி தொடராகவும் அமையும் இந்த பொங்கலின் வளர்வாக நீளுகிறது.. மக்களின் இன்பக் கனவுகளை நிறைவேற்றும் வாழ்க்கையை ஏற்படுத்தும் இணையற்ற தொடக்கமாய் இருப்பதும் தைப் பொங்கலேயாகும்.பொங்கல் இது ஏனைய திருநாட்களை போல ஒரு நாள் விழாவல்ல. அது காணும் பொங்கல் என அடுத்தடுத்து நீண்டு.. முதியோரை கண்டு வணங்குவதும் அவர்களின் வாழ்த்துக்களை பெறுவதும் அதன் நிறைவாக காளை விரட்டு, மஞ்சு விரட்டு, எருது விடும் விழாவெனவும் ஊர்தோறும் மாறிமாறி விழா கொண்டாடி மகிழும் நம் தமிழர் நாடு!ஏர் உழவோடு இணைந்து ழைக்கும் மாட்டிற்கும் மனிதர்கள் நமக்கும் கதிரோனுக்கும் நம் தாய் மண்ணிற்கும் என கலந்து நிற்கும் நம் பொங்கலை வாழ்ந்திட வார்த்தைகளே இல்லை என்போம்.இளையோர்கள் காளைகளுடன் போட்டியிட்டு ஓடிப்பிடித்து விளையாடி விலங்காக இருக்கும் மாட்டிற்கும் மனிதருக்கும் இருக்கும் உறவுகளை புதுப்பித்து வெற்றியையும் தோல்வியையும் இடையே சமமாக பங்குகளாக வைப்பதும் உலகின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக, பொது நிலையாக இருப்பதும் பெரும் மகிழ்வளிக்கும் திருநாளாகிறது.நிலம் இன்றி நாடில்லை!
நாடின்றி நிலையில்லை!
நிலையின்றி வளமில்லை!
வளமின்றி யாருக்கும் வாழ்வில்லை!இதைத்தான் நமக்கு பொங்கல் திருநாள் சொல்லி முடிக்கின்றது! இதுவே நம் பண்பாட்டின் அடையாளங்களாக அனைத் தையும் அடக்கிய கொண்டாட்டமாகிறது. அப்படி கொண்டாடும் நம்முள் இன்று அறிவு புரட்சியும் விளைந்தோங்கி நிற்பது நமக்கு மேலும் ஒரு பொங்கலாய் மணக்கிறது. முன்னை பழமைக்கும் பழையதாய் இன்றைய புதுமைக்கும் புதியதாய் வாழும் தமிழர் மரபுகள் வாழ வாழவைக்கும் பொங்கலின் களிப்பில் தமிழர் எல்லாம் வாழ்ந்து செழிக்க இனிதே வாழ்த்துவோம்!தமிழர் நம் மண்ணும் மக்களும் மணம் வீசும் மலராக மலர்ந்து தமிழகம் மேலும் சிறந்தோங்க நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இனிய பொங்கல் இன்பம் அளிக்கும் பொங்கலாக மாற வாழ்த்துகளை தூவி மகிழ்கிறேன். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து..கரும்பும் இனிப்பு மாக
கன்னல் தமிழு மாக
மஞ்சள் கிழங்கு மாக
மட்டற்ற மகிழ்ச்சியு மாக..
வாழ்க தமிழரெல்லாம்!
வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

தமிழர் திருநாளாம்.. தைப்பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!***உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்..

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube