தமிழர்களுக்கு உதவி செய்ய பாஜக உதவிக்குழு ஒடிசாவுக்கு பயணம் : அண்ணாமலை

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய பாஜக உதவிக்குழு ஒடிசா செல்வதாக அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக் கொண்ட கோர சம்பவம் நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தொய்வின்றி இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இந்த விபத்தில் சிக்கிய தமிழக சகோதர, சகோதரிகளுக்கு பரிபூரண உதவி செய்து, அவர்கள் நல்ல நிலையில் தமிழகம் திரும்பி தங்கள் குடும்பத்தாருடன் இணைந்திடும் வரை துணைநின்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட தமிழக பா.ஜ.க சார்பில் கீழ்கண்ட குழுவானது அமைக்கப்பட்டு. இக்குழுவானது இன்றே ஒடிசா விரைந்து தங்களை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்குழுவில் கே.ரவிச்சந்திரன், கே.பி. ஜெயக்குமார், ஏ.என்.எஸ் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விபத்தில் சிக்கிய அல்லது ரயிலில் பயணித்த தங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் யாருக்கேனும் எவ்வித உதவி தேவைப்பட்டாலும் இவர்களை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் 132 பேர் விபத்துக்குள்ளான கோரமண்டல மற்றும்  ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என வருவாய்த்துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக