அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

தமிழ்நாடு அரசு வள்ளலார் பெரு வெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைக் கைவிடவேண்டும் : பெ. மணியரசன் அறிக்கை…

தமிழ்நாடு அரசு வள்ளலார் பெரு வெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைக் கைவிட்டு, வேறொரு இடத்தில் வடலூரிலேயே அமைத்தல் தொடர்பாக தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டார். அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : வள்ளலார் 157 ஆண்டுகளுக்கு முன் 1867-இல் நிறுவிய வடலூர் சத்திய ஞான சபைப் பெருவெளி 106 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட வெட்ட வெளியாகும். அங்குள்ள பார்வதிபுரம் மக்கள் அன்பளிப்பாக வள்ளலாருக்கு வழங்கிய நிலங்கள் இப்பெருவெளி. இந்த 157 ஆண்டுகளில் அந்தப் பெருவெளியில் எந்தப் பின்னமும், சிதைவும் ஏற்பட்டதில்லை. வள்ளலார் ஆன்மிக மெய்யியலில் பெருவெளி என்பது இறைவன் உலவும் வெளியாகவும், பேரண்டக் கோட்பாடாகவும் இருப்பதால் அதில் யாரும் எந்தச் சிதைவும் ஏற்படுத்த வில்லை.

வள்ளலார் 200 ஆண்டை ஒட்டி, தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் பன்னாட்டு மையம் நிறுவப்போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபோது மகிழ்ந்தோம். ஆனால், அந்தப் பன்னாட்டு மையக் கட்டடங்கள், வடலூர்ப் பெருவெளியை அழித்து அதில் கட்டப்படும் என்ற கொடுஞ்செய்தி அப்போது அறிவிக்கப்படவில்லை. கடந்த பல நாட்களாக பொக்லைன் வைத்துப் பாதாளப் பள்ளங்கள் வெட்டி பெருவெளியைக் குதறிக் கொண்டிருக்கிறார்கள், ஒப்பந்தக்காரர்கள்.

“அண்ணுறு சிற்பர வெளியாய்த் தற்பரமாம்

அமர்ந்த பெருவெளியாகி அருளின்ப வெளியாய்”

இறைவன் உலவும் இடம் பெருவெளி என்பார் வள்ளலார்.

வடலூர் சத்திய ஞான சபைப் வெருவெளியில் பன்னாட்டு மையக் கட்டடங்கள் கட்டத் திட்டமிட்டுள்ளார்கள் என்பது தெரிந்தவுடன் வள்ளலார் பணியகப் பொறுப்பாளர்கள் 8.12.2023 அன்று இந்து சமய அறநிலையத் துறையின் கடலூர் இணை ஆணையரிடம் பெருவெளியைத் தவிர்த்து வேறிடத்தில் கட்டுமாறு கோரிக்கை மனு கொடுத்தார்கள். அதே கோரிக்கையை முன்வைத்து கடலூரில் 10.1.1024 அன்று மக்கள் திரள் உண்ணாப் போராட்டமும், 20.2.2024 கடலூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் வள்ளலார் சபை அன்பர்களும், வள்ளலார் பணியகத்தாரும், தெய்வத் தமிழ்ப் பேரவையினரும் இணைந்து நடத்தினர். குடந்தையில் 18.3.2024 அன்று ஆர்ப்பாட்டமும், தஞ்சையில் 29.3.2024 அன்று மாபெரும் பொதுக்கூட்டமும் நடத்தினர்.

ஆனால், தமிழ்நாடு அரசு முரட்டுத்தனமாக வள்ளலார் பெருவெளியை வெட்டிச் சிதைப்பது தொடர்கிறது. வள்ளலார் சத்திய ஞான சபையும், பெருவெளியும் அமைந்துள்ள பார்வதிபுரம் கிராம மக்கள் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் பெருவெளியை வெட்டிச்சிதைக்கும் பொக்லைன்கள் முன் இன்று (8.4.2024) மறியல் நடத்தித் தடுத்துள்ளார்கள். உடனே காவல்துறை அவர்களைத் தளைப்படுத்தி மண்டபத்தில் அடைத்துள்ளார்கள்.

வள்ளலார் பெருவெளியை அழிக்காதீர் என்ற இதே கோரிக்கையைத் தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்து 10.4.2024 புதன் காலை 10 மணிக்கு சன்மார்க்க சங்க சபைகளைச் சேர்ந்தோரும், வள்ளலார் பணியகம் மற்றும் தெய்வத் தமிழ்ப் பேரவையினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் மக்களும் வடலூர் வள்ளலார் பெருவெளி நுழைவு வாயில் முன்பாகக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடத்த உள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு வள்ளலார் பெரு வெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைக் கைவிட்டு, வேறொரு இடத்தில் வடலூரிலேயே அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்