தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய வானொலியிலும், டிடி தமிழ் தொலைக்காட்சியிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பிற்கு நேரம் ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் மார்ச் 26-ஆம் தேதி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி திருமதி. அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பிற்குத் தலா 1079 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அகில இந்திய வானொலியில் தேர்தல் குறித்த ஒலிபரப்பு இம்மாதம் 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், இரவு 7.30 மணி முதல் இரவு 8.30/8.45 மணி வரையிலும் இடம்பெறும். தேர்தல் ஒலிபரப்பினை தமிழ்நாட்டில் உள்ள அகில இந்திய வானொலியின் முதல் அலை வரிசைகள், கோடைப் பண்பலை உள்ளிட்ட ரெயின்போ பண்பலை அலைவரிசைகள், தர்மபுரி, நாகர்கோயில் வானொலி ஆகியவற்றில் நேயர்கள் கேட்கலாம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் .குறள் விளக்கம்: இவ்வுலகிற்கு





