சென்னை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 32 மணி நேர உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாளை மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த உண்ணாவிரதத்திற்கு மாநில தலைவர் ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் பி.அபராஜிதன், ஆ.மிக்கேலம்மாள், வி.குப்புசாமி, எஸ்.கனகவேல், மாநில செயலாளர்கள் சி.பிச்சுமணி, ஆ.கிருபாவதி, க.ரவி, த.ஜெயந்தி, கு.குணா, ப.சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஎன்ஜிஇஏ மாநில தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.நூர்ஜஹான் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும்.
அரசு அனைத்துத்துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.6850ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆண் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை வழங்கக்கூடிய தற்செயல் விடுப்பை வருடம் முழுவதும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவதுபோல், சத்துணவு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். தலைவர்கள் பிறந்தநாளன்று வழங்கக்கூடிய இனிப்பு பொங்கல் செலவு தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும்.
சத்துணவு சமைப்பதற்கு தேவையான எரிவாயு உருளை செலவுத் தொகையை அரசே முழுமையாக வழங்க வேண்டும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வழங்கக்கூடிய உருளைக்கிழங்கு செலவுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். என்கிற 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில் டிஎன்ஜிஇஏ முன்னாள் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், முன்னாள் மாநில துணைத் தலைவர் ச.இ.கண்ணன், டிஎன்ஆர்டிஓஏ மாநில துணைத் தலைவர் மு.செல்வக்குமார், டின்என்எம்ஏபிஏ மாநில பொதுச் செயலாளர் இ.மாயமலை, டிஎன்ஐசிடிஎஸ்ஓயுஎஸ் பொதுச் செயலாளர் இரா.வாசுகி, டிஎன்எச்ஆர்இ(யு)ஏ மாநில பொருளாளர் வி.பி.பரமேஸ்வரன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





