தம்பதியை வழிமறித்து தங்கசங்கிலி பறிப்பு…

கோலார் தங்கவயல், பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா சென்னசெட்டிஹள்ளியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் புஷ்பலதா. இவரது கணவர் சோமேஷ். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் சிந்தாமணிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். மைலாபுரா-கைலாபுராவை அடுத்த கவி சாலையில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர், தம்பதியை வழிமறித்தனர். இதை பார்த்த தம்பதி அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர். ஆனால் மர்மநபர்கள் அவர்களை தப்பிசெல்ல விடாமல் கத்தி முனையில் மடக்கினர். பின்னர் தம்பதியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர்கள், புஷ்பலதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இந்தநிலையில் கண்எரிச்சல் தாங்க முடியாமல் தவித்த தம்பதி, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தம்பதி தரப்பில் சிந்தாமணி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தம்பதியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஹெல்மெட் அணிந்து வந்த, 2 பேர் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கசங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றிருப்பதாக தெரிவித்தனர். 2 பேருக்கும் சுமார் 40 வயது முதல் 50 வயது வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிந்தாமணி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்