குறள் 40.
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி
.குறள் விளக்கம்: ஒருவன் தான் செய்ய வேண்டியது எது என்று ஆராய்ந்தால் அது அறச்செயல்களேயாகும். செய்யாமல் விட வேண்டியது எது என்று ஆராய்ந்தால் அது பழி வரக்கூடியவைகளைச் செய்யாது விட வேண்டும்.
திருமறை விளக்கம்: “அப்படியே திருமறையும் ரோமர் 16:19ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்கு பேதைகளுமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” எனவும், ஆதியாகமம் 4:7 “நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;” எனவும்,ரோமர் 12:17 “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்;”என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.






