சென்னை:
சென்னை மடிப்பாக்கம் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரியின்போது குளத்தில் இறங்கிய 5 பேர் பரிதாபமாக உ யிரிழந்தனர்.
சென்னை மடிப்பாக்கம் அருகே மூவரசம்பட்டில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்ட இன்று தீர்த்தவாரிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை முன்னிட்டு கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கோவிலில் பணியாற்றுபவர்கள்,தன்னார்வலர்கள் என 25 பேர் ஈடுபட்டனர். அஸ்திரதேவரை குளத்தில் முக்கி எடுக்கும் போது 5 தன்னார்வளர்கள் காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லையே என்று அங்கு கூடியிருந்தவர்கள் பதற்றமடைந்தனர்.
உடனடியாக இதுதொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் மூழ்கியவர்களை தேடும்பணியில் ஈடுபட்டனர். இதில் ராகவன், லேகேஷ்வரன், பானேஷ், சூர்யா ஆகிய 4 பேரின் உடல்கள் இறந்தநிலையிலேயே மீட்கப்பட்டனர் மாயமான 5வது நபரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. இறுதியாக அவரது உடலும் கிடைத்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவரும் இறந்துவிட்டதாகவே தெரிவிக்கப்பட்டது.
5 பேர் இறந்த சம்பவம் பற்றி அறிந்த பரங்கிமலை துணை ஆணையர் தீபக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் பக்தர்கள், பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
குளத்தில் மூழ்க காரணம் என்ன?
கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில் 20 அடி ஆழம் கொண்ட கோவில் குளத்தை முறையாக பராமரித்தார்களா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. 5 பேர் திடீரென எப்படி மூழ்கி இருக்க முடியும். அடியில் சகதி எதுவும் இருந்து அதில் சிக்கிக் கொண்டார்களா? என பல கேள்விகள் எழுகின்றன. இதுதொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்பதே பொதுமக்கள், தன்னார்வலர்களின் ஆவலாக உள்ளது.