தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர் பிடித்தமின்றி முழுமையாக சம்பளம் வழங்க வேண்டும் என தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநகர தூய்மை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200 பேர் நேற்றுகாலை 10 மணிஅளவில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை ரூ.550-ல் இருந்து ரூ.650 ஆக உயர்த்தி கொடுக்க மாவட்ட கலெக்டரின் செயல்முறை ஆணையை உடனே வழங்க வேண்டும். மாநகர தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்திற்கு தெரிவிக்காமல் புதிய தூய்மை பணியாளர்களை நியமிக்கக்கூடாது. தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.550 தினக்கூலியில் ரூ.50-யை பிடித்தம் செய்து புதிதாக சேர்க்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கக்கூடாது. பிடித்தமின்றி முழுமையாக சம்பளம் வழங்க வேண்டும். 2 மாத காலமாக முழுமையான சம்பளத்தை தராமல் பிடித்தம் செய்துள்ள இ.பி.எப்., இ.எஸ்.ஐ. விவரத்தையும், சம்பள விவரத்தையும் ரசீது ஆகவும், 300 பேரின் பெயர் விவரங்களையும் கொடுக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை பணிக்கு தேவையான கையுறைகள், உடைகள் 3 ஜோடி, உபயோக பொருட்களான கூடை, மண்வெட்டி, கடப்பாரை, காலணி, மழைக்கோட்டு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கொடுத்து சம்பளமும் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதை அறிந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடும்ப அட்டையை, வங்கி கணக்குடன் இணைக்காமல் இருப்பது தான் இந்த பிரச்சினைக்கு காரணம். இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனறு தெரிவித்தார். பின்னர் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. எவ்வளவு நேரமானாலும் கலெக்டரை நேரில் சந்தித்து பேசிவிட்டு தான் கலைந்து செல்வோம் என கூறினர். போராட்டத்தை தொடர்ந்தால் கைது செய்வோம் என போலீசார் கூறியபோது, கைது செய்தாலும் பரவாயில்லை என கூறினர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாமல் அப்படியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.சங்க நிர்வாகிகள் சிலர் மாநகராட்சி ஆணையர் சரவணனை சந்தித்து பேசியபோது ஏற்பட்ட உடன்பாடு காரணமாக பிற்பகல் 2 மணி அளவில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.