அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்வு குறித்த விவாதம் 2025

3.56 கோடி பதிவுகள் மற்றும் நாடு தழுவிய ‘மக்கள் இயக்க’ நடவடிக்கைகளில் 1.55 கோடி பேர் ஈடுபாட்டுடன் பங்கேற்று சாதனை

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைப் போக்குவதற்கு கற்றலைத் திருவிழாவாக மாற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள முன்முயற்சியான தேர்வு குறித்த விவாதம் அதன் 8-வது பதிப்பில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2018-ம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து, தேர்வு குறித்த விவாதம் நாடு தழுவிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. 2025-ம் ஆண்டில்  8-வது பதிப்பில் 3.56 கோடி பதிவுகளைப் பெற்றுள்ளது. இது 7-வது பதிப்பிலிருந்து 1.3 கோடி பதிவுகளின் அதிகரிப்பை காட்டுகிறது.தேர்வு குறித்த விவாதம் பிரபலமான நிகழ்ச்சியாக மாறியிருப்பது மட்டுமின்றி, “மக்கள் இயக்கமாக”வும் மாறியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஆழமாக எதிரொலிக்கிறது. தேர்வு குறித்த மன அழுத்தத்தை சரிசெய்வதிலும், தேர்வுகளை ஒரு திருவிழாவாக காண்பதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதிலும் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது.தேர்வு குறித்த விவாதத்தை “மக்கள் இயக்கமாக” மேலும் வலுப்படுத்த, 2025, ஜனவரி  12 (தேசிய இளைஞர் தினம்) முதல் 2025, ஜனவரி  23 (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்) வரை பள்ளி நிலையில் தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகள், தேர்வு குறித்த விவாதத்தை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவதில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இவற்றில் 1.42 கோடி மாணவர்கள், 12.81 லட்சம் ஆசிரியர்கள், 2.94 லட்சம் பள்ளிகள் பங்கேற்றன. கோ-கோ, கபடி போன்ற உள்நாட்டு விளையாட்டுகள், குறுகிய தூர மராத்தான்கள், படைப்பாற்றல் மீம் போட்டிகள், வீதி நாடக நிகழ்ச்சிகள், கண்கவரும் சுவரொட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகளில் பங்கேற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.இந்த நடவடிக்கைகளின் உச்சமாக, வீரம் மற்றும் தியாகம் பற்றிய புகழ்பெற்ற உத்வேகம் தரும் கதைகள் திரையிடப்பட்டன. “பாரத் ஹை ஹம்” தொடர்  2025, ஜனவரி 23 அன்று நடத்தப்பட்டது. அதன்பிறகு, நாடு முழுவதும் உள்ள 567 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் “பாரத் ஹை ஹம்” என்ற தலைப்பிலான விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. கேந்திரிய வித்யாலயாக்களில் இருந்து 17,408 பேர், ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களில் இருந்து 4,567 பேர், பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் இருந்து 5,542 பேர், சிபிஎஸ்இ  இணைப்பு கொண்ட பள்ளிகளைச் சேர்ந்த 18,394 பேர், மாநில கல்வி வாரிய பள்ளிகளைச் சேர்ந்த 10,050 பேர் என மொத்தம் 55,961 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பிரதமரால் எழுதப்பட்ட “தேர்வு வீரர்கள்” புத்தகம் வழங்கப்பட்டது.தேர்வு குறித்த விவாதம் 2025 மீண்டும் ஒரு மகத்தான வெற்றியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு நேர்மறையான, ஆதரவான கற்றல் சூழலை வளர்ப்பதில் ஒரு முக்கிய முயற்சியாக அதன் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை