தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:
மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் இன்று (செப்டம்பர் 12) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் மிசா சட்டம் குறித்தும் பேசியது கண்டனங்களை குவித்தது. இந்த நிலையில் முதலமைச்சரின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்தது. அதன்படி இன்று அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கட்சியின் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, அமைப்புச்செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் இப்ராஹிம், “தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க சட்டப்பேரவையை இன்று ஷூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றியிருக்கிறார்கள். திரைப்படத்தில் எப்படி மக்களை ஏமாற்றி வசப்படுத்தினாரோ அதுபோல தமிழ்நாட்டு மக்களிடம் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பொய்யான ரீல்ஸ்களை போட்டு ஆட்சியைப் பிடித்துள்ளீர்கள்.
இதை நம்பி மக்களும் வாக்களித்துவிட்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இது பற்றி மக்கள் கேட்டால் கஜானா காலி என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒவ்வொரு கேள்வியையும் மக்களின் சார்பாக எடுத்து வைத்தார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தொடர் மின்வெட்டு போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக, அரசியல் விமர்சனம் இல்லாமல் தெளிவாக சுட்டிக்காட்டி கேள்வி கேட்டார். ஆனால் முதல்வராக இருக்கக்கூடிய விஜய், கேள்விகளுக்கெல்லாம் நேரடியாக பதில் சொன்னாரா. இல்லைஞ் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் உரைக்கும் போது தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக ஒரு விஷயமாவது இருந்ததா. இல்லை.
ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளைப் சொல்லி சட்டமன்ற மாண்பை குலைத்துள்ளீர்கள்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு மிசா காலத்தின் போது ஏற்பட்ட இன்னல்களை கேலி செய்துள்ளீர்கள். அவர் மிசாவில் கைதாகும்போது உங்களுடைய வயது ஒன்று. அவரைப் பார்த்து கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது” என்ற கேள்வி எழுப்பினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர், “அவமதிக்காதே.. அவமதிக்காதேஞ் மிசா போராளிகளை அவமதிக்காதே…”
“துப்பில்லை துப்பில்லை பதில் சொல்ல துப்பில்லை”, “நீங்கள் மிசா பற்றி பேசலாமா” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
சேகர்பாபு
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேகர்பாபு பேசுகையில், மிஸ்டர் கிளீன் என்பதற்கு சொந்தக்காரர் எங்களுடைய தலைவர். இவரை ஒரு டவுசர் பார்ட்டி டேய் நிர்மல் குமார், இப்படி சட்டமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்தோம். அன்றைய ஆளுநரை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஓடவிட்டார். இன்று முதல்வர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் ஓட விடுகிறார்.
ஓடும்போது, நான் திங்கள்கிழமை பதில் சொல்ல வருவேன். யாரும் ஓடி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
ஆனால் ஒரு மணி நேரம் சினிமா பாஷையில் வசனம் பேசினார். ஒரு மணி நேரம் எழுந்து நின்று பேசுவதற்கு வாய்ப்பு கேட்டோம். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விக்கு பதில் சொல்ல திராணியற்ற தைரியம் இல்லாத முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் பேசி முடித்தார். வாய்ப்பு கொடுத்து இருந்தால் தெரிந்திருக்கும். திமுக இன்று அடிபட்ட புலியாக களத்தில் நின்று கொண்டிருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் வட்டியும் முதலுமாக சேர்த்து கொடுப்போம்” என்று காட்டமாக பேசினார்.


எ.வ.வேலு
திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் எ.வ.வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினர், விஜயின் தரங்கெட்ட பேச்சை கண்டிக்கின்றோம். வாயை அடக்குஞ்வாயை அடக்குஞ் முதல்வர் விஜயே வாயை அடக்குஞ் எங்கள் தலைவர் நடத்தியது ரியல் ஆட்சி. முதல்வர் விஜய் நடத்துவது ரீல் ஆட்சி என்று கோஷங்களை எழுப்பினர்.
அ.ராசா
சென்னை சைதாப்பேட்டை பனகல மாளிகை அருகே முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், திமுக எம்.பியும், துணை பொதுச் செயலாளருமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்,பியும் துணை பொதுச்செயலாளருமான ஆ ராசா தலைமை தாங்கி பேசினார். இதில் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆ.ராசா பேசுகையில், “தமிழ்நாட்டு அரசியலில் ஒரு கருப்பு நாளை குறிக்கின்ற இன்னொரு கருப்பு நாள். தமிழக சட்டமன்றத்திற்கு என்று ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இதில் எத்தனையோ முட்டல் மோதல் வந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது அண்ணாவாக இருந்தாலும், கலைஞராக இருந்தாலும் கேட்கப்படும் சூடான கேள்விகளுக்கு இதமான பதிலை ஆட்சிப் பொறுப்பிலே இருந்தால் அளிப்பார்கள். எதிர்க்கட்சியில் இருந்தால் சூடாகவும் சுவையாகவும் கேள்விகளை கேட்பார்கள்.
கேட்கப்படுகின்ற கேள்வியும் சொல்லப்படுகின்ற பதிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு, அரசியலில், பொது வாழ்க்கையில், வளர்ச்சி திட்டங்களில், ஆட்சிப் பணியில் மிகப்பெரிய வெளிச்சத்தை அரசியல் நாகரிகத்தை கொண்டு வரும் இடமாக இதுவரை சட்டமன்றம் இருந்தது. அப்படியானால் குற்றச்சாட்டுகளே இல்லையாஞ்மிக மோசமான குற்றச்சாட்டுகள் எல்லாம் இருந்தன. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தார். அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக குழந்தைவேல் இருந்தார்.
அவர் சட்டமன்றத்தில் கலைஞர் இருக்கும்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் 300 ஏக்கர் நிலம் கலைஞருக்கு இருக்கிறது. அவர் வாங்கி இருக்கிறார் என்று சொன்னார். உடனடியாக கலைஞர் எழுந்து, செங்கல்பட்டில் எனக்கு நிலம் இருப்பதை அமைச்சர் நிரூபித்துவிட்டால் நான் என் அரசியல் வாழ்க்கையை துறவறம் செய்கிறேன். நிரூபிக்காவிட்டால் அவர் துறவறம் செய்வாரா என சவால் விடுத்தார். இதற்கு அமைச்சரும் ஒப்புக்கொண்டார். ஒரு வாரம் ஆனது. அப்படி ஒரு நிலமே இல்லை.
பதவி விலக வேண்டும் என்ற நிலை வரும்போது எம்ஜிஆர் கலைஞரிடம் அன்பாக கேட்டார். சின்ன பையன் தெரியாமல் பேசி விட்டான், அவரை மந்திரி சபையில் இருந்து எடுத்து விடட்டுமா என்று கேட்டார்.
அதற்கு கலைஞர் பெருந்தன்மையோடு, முதிர்ச்சியின்மை காரணமாக பேசிவிட்டார். நான் மன்னித்து விட்டேன். அவர் அமைச்சராக தொடரட்டும் என்றார். எம்ஜிஆர் மீது பல்கேரியா ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. கலைஞர் ஆதாரத்தோடு போனார். சட்டமன்றத்தில் அனல் பறக்கிறது. எம்ஜிஆர் தலையை கீழே போட்டுக் கொண்டார். பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.
உடனே எம்ஜிஆர் இந்த பதிலை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.. அதற்கு கலைஞர் நண்பா இன்று போய் நாளை வா என கூறினார். இது சட்டமன்ற பதிவில் இருக்கிறது.
அண்ணா காலம் முதல் இப்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் காலம் வரை எங்களுடைய கேள்விகளுக்கும் பதில்களுக்கும் எந்த அநாகரிகமான அர்த்தத்தையும் கற்பிக்க முடியாது.
நமது சிற்றரசு நல்ல நடிகன் என்றார். உலகத்தில் எத்தனையோ நல்ல நடிகர்கள் இருந்தார்கள். ஆனால் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது.
நடிப்பின் பயனாக இந்த சமூகத்துக்கு என்ன சொல்ல வருகிறாய். கலை என்பது மக்களுக்காக இருக்க வேண்டும். அப்படி சொன்ன இயக்கம் தான் திமுக. அப்படி சொன்னவர்கள் கலைஞரும் அண்ணாவும் தான்.
சிற்றரசு சொன்னது போல மகா நடிகன் அல்லஞ் மகா அயோக்கியன்.
எமர்ஜென்சி, சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசுகிறார். இதில் எல்லாம் உங்களுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா” என்று காட்டமாக பேசினார். எங்கள் ஆட்சியில் நடந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைஞ் உங்கள் ஆட்சியில் நடந்தால் தனி மனிதப் பிரச்சனையா? என்றும் கேள்வி எழுப்பினார்.
சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, மயிலை. வேலு, மற்றும் மு.க.தமிழரசு, முன்னாள் அமைச்சர்கள், ஆலடி அருணா, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக ஒன்றிய, மாநகர செயலாளர்கள், திமுக உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.