நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று, பிரபல நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான (2026 Michelin Le Mans Cup) கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் கடந்த 3.9.2026 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்“ தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்ததை செயல்படுத்தும் வகையில், இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று, அங்குள்ள Race Control மற்றும் Race circuit பகுதிகளையும் பார்வையிட்டதோடு, சர்வதேச அளவிலான நீண்டதூர கார் பந்தயத்தை நடத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் சில்வர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத் திடலில், பிரபல நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் கலந்துகொண்ட 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், சர்வதேச அளவிலான நீண்டதூர மோட்டார் பந்தயங்களில் நிலவும் பிரம்மாண்டம், நவீன தொழில்நுட்பம், சிறப்பான நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் விளையாட்டுத் திறன் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததோடு, உலகளாவிய பந்தயத் தளங்களில் இந்தியத் திறமையாளர்களின் பங்கேற்பை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் இப்பயணம் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வில், பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.