‘நான் அவனில்லை’ – தோனியின் முதல் டெஸ்ட் விக்கெட்; ஆதாரம் வெளியிட்ட பீட்டர்சன்

நடப்பு ஐபிஎல் சீசனின் வர்ணனை பணியை கவனித்து வருகிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன். ‘நீங்கள் தானே தோனி கைப்பற்றிய முதல் மற்றும் ஒரே டெஸ்ட் விக்கெட்’ என அவரிடம் பலரும் கேட்டு வருகின்றனர். அது தொடர்பாக அவரும் விளக்கம் கொடுத்து அலுத்துவிட்டார். இந்த சூழலில் அது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதன் மூலம் ‘நான் அவனில்லை’ என அடித்து சொல்லியுள்ளார்.

இந்த கேள்விக்கு வித்திட்டவர் மகேந்திர சிங் தோனி தான். 2017 ஐபிஎல் சீசனின் போது வர்ணனை பணியை கவனித்துக் கொண்டிருந்த தோனி ‘அவர்தான் என்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட்’ என வேடிக்கையாக சொல்லி இருந்தார். அப்போது வர்ணனை பணியை கவனித்த பீட்டர்சன், மைக்ரோ போன் மூலம் புனே வீரர் மனோஜ் திவாரியுடன் பேசி இருந்தார். அப்போதுதான் இது நடந்தது.

இது நடந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் ‘நீங்கள் தானே தோனியின் முதல் டெஸ்ட் விக்கெட்’ என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2011-ல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் போட்டியின் வீடியோ கிளிப் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பீட்டர்சன். அந்த போட்டியின் முதல் நாள் அன்று தோனி பந்து வீசினார். அப்போது பீட்டர்சன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அதில் ஒரு பந்து பீட்டர்சனின் பேட்டை உரசி சென்றது போல இருந்தது. ‘அவுட்’ என தோனி முறையிட்டார். நடுவரும் அவுட் கொடுத்தார். டிஆர்எஸ் பரிசீலனையில் பீட்டர்சன் அவுட் இல்லை என உறுதியானது.

“ஆதாரம் மிகத் தெளிவாக உள்ளது. நான் தோனியின் முதல் டெஸ்ட் விக்கெட் அல்ல. சிறப்பாக பந்து வீசி உள்ளீர்கள் எம்.எஸ்” என அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் பீட்டர்சன். “தோனியின் முதல் விக்கெட் நான் தான் என சொல்லப்படும் அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கும் வகையில் லார்ட்ஸ் போட்டியின் வீடியோ ஆதாரத்தை தீவிரமாக தேடி வருகிறேன். நிச்சயமாக அவரது முதல் டெஸ்ட் விக்கெட் நான் இல்லை” என அவர் முந்தைய ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பவுலர் தோனி: விக்கெட் கீப்பரான தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஓவர்கள் வீசி உள்ளார். 6 ஓவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும், 16 ஓவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடங்கும். இதில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அது ஒருநாள் கிரிக்கெட்டில் கைப்பற்றியதாகும். மேற்கிந்திய தீவுகள் வீரர் டி.எம். டவுலின் மட்டுமே.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.