நீதிமன்ற உத்தரவை மீறி மூவரசம்பேட்டை ஏரி அருகே குப்பை கொட்டும் பஞ்சாயத்து: நடவடிக்கை பாயுமா?

மடிப்பாக்கம்:
மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை 1வது வார்டு அருகே சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மூவரசம்பேட் ஏரி நுழைவில் மூவரசம்பேட் பஞ்சாயத்தால் கொட்டப்படும் குப்பையால் மொத்தம் உள்ள நான்கு தெருக்களில் தூர்நாற்றம் வீசுகிறது.
ஏரியின் நுழைவில் கொட்டப்படும் கழிவுநீர், குப்பைகள் ஏரியில் கலந்து குடிநீர் மாசடைகிறது.
இங்கு கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் தேக்கமடைந்து தெருக்களில் பரவி காணப்படுகிறது. பல்வேறு கொடிய நோய்கள் தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே இங்கு குப்பை கொட்டக்கூடாது என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவ்ஊர் பொதுமக்களில் ஒருவரான வரதன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் மூவரசம்பேட் பஞ்சாயத்தார் குப்பை கொட்ட கூடாது என்று தடை உத்தரவும் பிறப்பித்தது.
குப்பைகள் கொட்ட தடை விதிக்கபட்ட பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்டு அரசு உயர் அதிகாரிகள் வட்டாட்சியர் போன்றவர்களால் பார்வையிட்டு உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் இங்கு பஞ்சாய்த்தால் குப்பை கொட்டபடுகிறது. இதுகுறித்து பஞ்சாய்த்து தலைவர் ஜி.கே.ரவி என்கின்ற விவேகானந்தனிடம் பொதுமக்கள் முறையிட்டால், இங்கு நீங்கள் யாரும் குடியிருக்க முடியாது. வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி விடுவேன் என்று மிரட்டுவதாக தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட