நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு: புதுச்சேரி- ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

புதுச்சேரி:
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மக்களுடன் புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் முற்றுகையிட்டார்.
புதுச்சேரி நகரத்திற்கு அடுத்த பெருநகரமாக விளங்கும் வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் மருத்துவ சேவைக்காக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டது. ஆனால், போதிய உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ சாதனங்கள் இன்றி அவசரகதியில் திறக்கப்பட்டது. இதனால் புதிய மருத்துவமனை திறக்கப்பட்டும் அது நோயாளிகளுக்கு பயன்படாத நிலை இருந்து வந்தது.
இதுகுறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது அந்த மருத்துவமனை கடந்த 6 மாதங்களாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள், உயிர் காக்கும் மருந்துகள் இல்லாத நிலை தொடர்கிறது. இதுகுறித்து கடந்த மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட அரசின் கவனத்திற்கு கொண்டு எதிர்கட்சி தலைவர் சென்றார்.
இந்நிலையில், மருத்துவமனை ஆம்புலன்சிற்கு ஓட்டுநர் இல்லை. இரவு நேரங்களில் மருத்துவர்கள் சரியாக பணியில் இல்லாமல் நோயாளிகளை அலைக்கழிப்பதாகவும், சிலருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்புவதாகவும், உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு இல்லை, கழிப்பிட வசதி, ஈசிஜி வசதி இல்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று திடீரென வில்லியனூர் அரசு மருத்துவமனையை பொதுமக்களுடன் சென்று முற்றுகையிட்டார். இதுகுறித்து பணியில் இருந்த தலைமை மருத்துவர் திலகவதி துறை இயக்குநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறினார்.
பின்னர், உடனடியாக வில்லியனூருக்கு சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு, மருத்துவ கண்காணிப்பாளர்கள் டாக்டர் முரளி, டாக்டர் ரகுநாதன், மருத்துவ அதிகாரி டாக்டர் வேல்முருகன் ஆகியோர் வந்தனர். அங்கு முற்றுகையில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், பொதுமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களை சமாதானப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர், வில்லியனூர் அரசு பொதுமருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும். போதிய மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். ஈசிஜி வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதையடுத்து சுகாதாரத் துறை இயக்குநர் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டார். அதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.