பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய 3-வது பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது

புதுடெல்லி:
பஞ்சாப் அருகே உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பிஎஸ்எஃப்) இன்று கைது செய்துள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல்லைப்பாதுகாப்புப்படை செய்திதொடர்பாளர் கூறுகையில், “அந்த ஊடுருவல்காரர் நேற்று நள்ளிரவிலில் இருந்து இன்று அதிகாலைக்குள் முன்பக்க எல்லையைக் கடந்து பஞ்சாப் மாவட்டத்தின் பெரோஷ்பூர் செக்டார் பகுதியில் உள்ள “திரத்” என்ற பகுதியின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் ஊடுருவிய நபர் பாகிஸ்தானில் உள்ள கைபர் பகுதியில் வசிப்பவர் என்று தெரியவந்துள்ளது. அவரிடம் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் கூட்டுக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் அவர் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்படலாம்“ என்று தெரிவித்தார்.
முன்னதாக, இதே பஞ்சாப் எல்லையில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்