பத்திரிகையாளர் நலவாரிய பயன்கள் கடைநிலை ஊழியருக்கும் கிடைக்குமா?

சென்னை: ​
விபத்​தில் உயி​ரிழக்​கும் பத்​திரி​கை​யாளர்​களுக்கு நலவாரி​யம் மூல​மாக ரூ.2 லட்​சம் வரை நிவாரணம் வழங்​கு​வதற்கு தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.
இதுகுறித்து செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ராமன் வெளி​யிட்ட அரசாணையில். பத்​திரி​கை​யாளர் நல வாரியக் குழு​வின் 8, 9-வது கூட்​டங்​களில் பத்​திரி​கை​யாளர்​களின் விபத்து மரண நிவாரணம் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.
அதன் அடிப்​படை​யில், பத்​தி ரி​கை​யாளர் நலவாரிய நிதி​யில் இருந்து விபத்​தால் மரணமடை​யும் பத்​திரி​கை​யாளர்​களுக்கு ரூ.2 லட்​சம் நிவாரணம் வழங்​க​வும், இந்​தத் தொகையை முதல்​வரின் பொது நிவாரண நிதி​யில் இருந்து இல்​லாமல், நலவாரிய நிதி​யில் இருந்தே அளிக்​க​வும் அந்​தக் கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.
இந்​தத் தீர்​மானத்தை கவன​முடன் பரிசீலித்த அரசு, அதை யேற்று தற்​போது அதி​காரப்​பூர்​வ​மாக அரசாணையை வெளி​யிட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
நல வாரியம் மூலம் நிவாரணம் வழங்கப் படும் என்கிற அரசாணை வரவேற்கத்தக்கது தான். ஆனால் இன்னும் ஏராளமான பத்திரி கையாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலையே நீடிக்கிறது.
பத்திரிகை துறையில்¢ கீழ்மட்ட பணியாளர்கள் வரை உள்ளனர். அவர்களுக்கு பத்திரிகை நிறு வனத்தின் அடையாள அட் டையை தவிர வேறு ஒரு அங்கீகாரமும் கிடையாது. உண்மையாக பத்தி ரிகைகளில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலானோர் அரசின் எந்த பலனையும் இதுவரை பெற்றது கிடையா-து.
பெரிய பெரிய பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களே அனைத்து பலனையும் அனுபவித்து வருகின்றனர். அரசு அங்கீகார அடையாள அட்டை என்பது அனைத்து பத்திரிகைகளுக்கும் கிடைப்பது கிடையாது. ஆனால் பல பத்திரிகைகள் தினமும் தங்கள் பத்திரிகைகளை அச்சடிக்கத்தான் செய்கிறார்கள். மாத, வார, மாதம் இருமுறை அச்சடிக்கும் பத்திரிகைகளும் முறையாக அச்சடித்து வெளியிட்டு வருகின்றன.
இதுபோன்ற நிறுவனங்களில்¢ செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்பட கலைஞர்கள், விளம் பர வடிவமைப்பாளர், பக்க வடிவமைப்பாளர், என்ஜினியர், நாளிதழ், மாத இதழ், வாரம் இருமுறை நாளிதழ்களை விநி யோகிப்பவர்கள் என எராள மான பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் பயனடைவது தான் நல வாரியம் அமைத்ததன் முழு பயனாக அமையும். பெரிய பத்திரிகைகளில் உள்ளவர்கள் மட்டும் பயனடைந்தால் அது நல வாரியத்திற்கு நன்மை பயக்காது.
தற்போது ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்று திறம்பட செயல் பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களின் நலன் கருதி கடைநிலை பணியாளர்கள் வரை பயன்பெறும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும். இதனால் செய்தித்துறையில் பணியாற்றும் ஏராளமான குடும்பங்கள் பயன டையம். இதுகுறித்து அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதே செய்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

பத்திரிகையாளர் நலவாரிய பயன்கள் கடைநிலை ஊழியருக்கும் கிடைக்குமா?