பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 166 ரன்களுக்கு சுருண்டது இலங்கை !

கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு சுருண்டது.

கொழும்பு நகரில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. நிஷான் மதுஷ்கா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஷான் மசூத்தின் அற்புதமான த்ரோவால் ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் குஷால் மெண்டிஸ் 6 ரன்னில் ஷாகீன் ஷா அப்ரீடி பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்நது ஏஞ்சலோ மேத்யூஸ் (9), கேப்டன் திமுத் கருணரத்னே (19) ஆகியோர் நசீம் ஷா பந்து வீச்சில் நடையை கட்டினர். 36 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் தினேஷ் சந்திமால், தனஞ்ஜெயா டி சில்வா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.

5-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை நசீம் ஷா பிரித்தார். தினேஷ் சந்திமால் 60 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா ரன் ஏதும் எடுக்காத நிலையில் அப்ரார் அகமது பந்தில் வெளியேறினார். தனது 13-வது அரை சதத்தை கடந்த தனஞ்ஜெயா டி சில்வா 68 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்ந்து பிரபாத் ஜெயசூர்யா 1, அஷிதா பெர்னாண்டோ 8, ரமேஷ் மெண்டிஸ் 27 ரன்களில் வெளியேற 48.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை அணி. பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரார் அகமது 4, நசீம் ஷா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 28.3 ஓவர்களில் 2விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.

இமாம் உல் ஹக் 6 , ஷான் மசூத் 51 ரன்னில் ஆட்டமிழந்தனர். அப்துல்லா ஷபிக் 74, பாபர் அஸம் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.