சென்னை:
சென்னை கோடம்பாக்கம் மண்டலம், 140வது வார்டு சைதாப்பேட்டை-&கோடம்பாக்கம் சாலையில், 2016ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியில் அப்போதைய மேயர் சைதை துரைசாமியின் நிதியில் கட்டப்பட்டதுதான் இந்த அம்மா பூங்கா. இந்த பூங்காவில், யோகா மையம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, வாகன நிறுத்தம், உடற்பயிற்சி கூடம், பசுமை பகுதி, கால்பந்தாட்ட ஆடுகள் உள்ளிட்டவை அமைந்திருந்தன.
சுமார் 1.5 கி.மீ சுற்றளவில் வசிக்கும் மக்கள், உடற்பயிற்சி மற்றும் ஓய்வு நடவடிக்கைகளுக்காக வேறு இடங்களைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தப் பூங்காவை மீண்டும் திறப்பது ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்குப் பயனளித்து வந்தது.
இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு அனைத்து பொருட்களும் பொருத்தப்பட்டிருந்தன. அதேபோல் முதியவர்கள் நடைபயணம் செய்வதற்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனால் இந்த பூங்காவிற்கு தினமும் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வழக்கம். மேலும் இந்த பூங்காவில் கால்பந்து கிரவுண்டும் அமைந்துள்ளதால் கால்பந்து வீரர்களும் காலை மாலை வேளைகளில் இங்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டுவதும், கால்பந்து விளையாடுவதும் வாடிக்கையாக இருந்தது. அதன்பிறகு இந்த பூங்காவில் பராமரிப்புப்பணி மேற்கொள்ளாத காரணத்தால் கடந்த சில வருடங்களாக இந்த பூங்காவின் செயல்பாடு தடைபட்டது.
இந்த பூங்கா சிதிலமடைந்ததை கணக்கில் கொண்டு 2024-25ஆம் ஆண்டு திமுக அரசின் பட்ஜெட்டில் இந்த பூங்காவை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 3.6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த திட்டமிட்டது. அதற்கான பணிகளும் தொடங்கின. நவீன விளையாட்டு மைதான உபகரணங்கள், யோகா மற்றும் ஸ்கேட்டிங் மையம் ஆகியவை புதுப்பித்தல், செயற்கை நீரூற்று, பூங்காவின் முகப்பு வடிவம் மாற்றி அமைத்தல், கழிப்பறை வசதி ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
ஆனால் 2026ம் ஆண்டு தேர்தல் காரணமாக இதன் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாக அருள் பிரகாசம் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று 3 மாதங்களை கடந்துள்ளது. சைதாப்பேட்டை அம்மா பூங்கா பணிகளை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் பாயவில்லை.

கால்பந்தாட்ட ஆளுகளத்தில் பங்கள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து ஏற்கனவே பொது மக்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் சைதாப்பேட்டை சட்டமன்ற உறப்பினர் அருள் பிரகாசத்திடம் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கால்பந்தாட்ட வீரர்களை முன்வந்து தங்கள் சொந்த செலவில் கிரவுண்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சிமெண்ட கொண்டு பூசி சீரமைத்துள்ளனர்.
இது குறித்து இந்த பூங்காவை உபயோகித்து வரும் மக்கள் கூறுகையில். சைதாப்பேட்டை 140வது வார்டில் அம்மா பூங்கா இயங்கி வந்தது. திடீரென்று கடந்த ஒரு வருடமாக குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் முதியோர்கள் நடைபயணம் செய்யும் இடம் மூடப்பட்டுள்ள. இதுகுறித்து தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தயவு செய்து குழந்தைகள் விளையாடுவதற்கும் முதியவர்கள் நடைபயணம் செய்வதற்கும் ஏற்பாடு செய்து தர உனடியாக பூங்காவை சீரமைத்து மக்கள் உபயோகததிற்கு திறக்க வேண்டும் என்றனர்.
அதேபோல் கால்பந்து வீரர்கள் கூறும்போது, சைதாப்பேட்டை அம்மா பூங்காவில் உள்ள கால்பந்து கிரவுண்ட் ஆங்காங்கே பள்ளம் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் கால்பந்து விளையாட சிரமமாக உள்ளது. அப்படி விளையாடும்போது வீரர்கள் தவறிவிழுந்து காயம் ஏற்படும் அவலநிலை ஏற்படுகிறது. அதேபோல் கிரவுண்டை சுற்றி போடப்பட்டுள்ள இரும்பு வேலிகள் அங்கங்கே கிழிந்து தொங்கிக் கொண்டிருப்பதால் கால்பந்து விளையாடும் போது அந்த வழியாக நடைபயணம் செல்லும் பொது மக்கள் மீது கால்பந்துபட்டு அவர்களுக்கு காயம் ஏற்படும் அவலமும் நிகழ்கிறது.
இது குறித்து சைதாப்பேட்டை தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்தும் அவர் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. நேரில் வந்தும் ஆய்வு செய்வில்லை. இந்த அம்மா பூங்காவை தொகுதி எம்எல்ஏ நேரில் வந்து பார்வையிட்டு அம்மா பூங்காவில் எஞ்சியுள்ள பணிகளை முடித்து விரைவில் பொதுமக்கள், சிறுவர்கள், கால்பந்தாட்ட வீரர்கள் பயன்படுத்த ஏதுவாக முழு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







