பார்த்திபன் தொடர்ந்த வழக்கு: 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை:
சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஜாதி, மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பிப்பவர்கள் உடனடியாக சான்று பெறும் வகையில், சட்டம், அல்லது அரசாணை, சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
சாதி, மதமற்றவர் என சான்று வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதால் வேறு எந்த சட்டத்துக்கும் எந்த பாதிப்பு ஏற்படப் போவதில்லை.தற்போது ஜாதி, மதமாற்றவர் என சான்று வழங்க சட்டங்கள் அல்லது உத்தரவுகள் ஏதும் இல்லை. எனவே புதிதாக சட்டம் இயற்றும்போது, ஜாதி, மதமற்றவர் என சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஜாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமூக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது.தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால், சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என பார்த்திபன் கோரியுள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு உள்துறை, வருவாய் மற்றும் சட்டத் துறை செயலர்கள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச்

பார்த்திபன் தொடர்ந்த வழக்கு: 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச்