பாலின கிளப் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி….

உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “சென்னை மாநகர
கூட்டமைப்பு திட்டம்” மற்றும் இந்திய அரசின் “நிர்பயா” திட்டங்களின் கீழ்
இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு
அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” (Gender and Policy
Lab) உருவாக்கப்பட்டு மேயர் 01.04.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பாலினநிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகமானது பல துறைகளுடன்
ஒருங்கிணைந்து கூட்டு அணுகு முறையின் மூலம் நிர்பயா திட்டத்தினை
கண்காணிக்கவும், இதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் அதற்கான விழிப்புணர்வை உருவாக்கவும், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும் ஏற்றதாகவும் மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாலின சமத்துவத்தை வளர்ப்பதை கொண்ட பாலின கிளப் (Gender Club) என்ற பாடத்திட்டம் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்துடன் (Gender and Policy Lab) இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தப் பாலின கிளப் திட்டமானது பள்ளி மாணவர்களை பாலின பேதமின்றி
ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்தவும், ஏற்றுக் கொள்ளவும், ஊக்குவிக்கும்
நோக்கத்தைக் கொண்டது. மேலும், மாணவர்களின் பாலின பேதமில்லா மனப்பான்மை,
அவர்களின் எதிர்கால இலட்சியம் மற்றும் நடத்தை ஆகியவற்றில் தாக்கத்தை
ஏற்படுத்தும். பாலின சமத்துவ உணர்வை குழந்தைகளிடம் வளர்ப்பதற்கும்,
ஆரோக்கியமான வகுப்பறை சூழலை மேம்படுத்துவதற்கும் பாலின கிளப் திட்டமானது
பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாலின சங்கத்தின் (Gender Club) பாடத்திட்டமானது, இணைந்து செயல்படுதல்
மற்றும் ஈடுபடுத்துதல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், செயல்பாடுகள்,
விவாதங்கள் மற்றும் நிஜ வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகளைக் கொண்டது. பாலின
கிளப் மூலம் தற்போதைய பாலின பண்புகள், பாலினம் சார்ந்த எதிர்பாப்புகளை
அலசுதல், இன்றைய கலாச்சாரம் மற்றும் ஆரோக்கியமான எல்லைகள் என்றால் என்ன?
போன்ற தலைப்புகளின் கீழ் மாணவர்கள் விவாதிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த கிளப்பானது, தரமான கல்வியின் இன்றியமையாத அம்சமாக மாணவர்களின்
எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

பள்ளி மேலாண்மை கூட்டங்களின் போது பாலின சமத்துவம் சார்ந்த
தலைப்புகளில் பெற்றோர்களை ஈடுபடுத்தவும், மாணவர்களின் படைப்புகளை பள்ளி
அளவிலான கண்காட்சி நடத்தி வெளிப்படுத்தவும் கூடுதலாக இந்த ஆண்டு
பாடத்திட்டத்தில் பாலின கிளப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகமானது, சென்னை பள்ளிகளில் பாலின கிளப் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 23.06.2023, 27.06.2023 மற்றும் 28.06.2023 ஆகிய நாட்களில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது குறித்த பயிற்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியானது, ஆசிரியர்களுக்கு பாடங்களை வழங்குவதற்கும், விவாதங்களை எவ்வாறு கையாள்வது என்பதற்கும் உதவும். மேலும், பள்ளிகளில் பாலின கிளப் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தப் பயிற்சி உதவும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.