பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 5 சிறுமிகள் – விழுப்புரத்தி 4 சிறுவர்கள் கைது…!

விழுப்புரம் அருகே 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற போது அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததைகயும் இதை கவனித்த அவரின் ஆசிரியர் இது குறித்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நல அலுவலரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். பின் அச்சிறுமியை முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போதுதான் அச்சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது தெரியவந்தது. அச்சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்தது தெரிய வந்தது. தன்னைப்போல், மேலும் 4 பெண் குழந்தைகளுக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் 4 சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 6 வயதுடைய 5 பெண் குழந்தைகளுக்கும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததும், அவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்தும், ஆபாசமாக அவர்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் மாவட்ட இளஞ்சிறார் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கடந்த 29ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் இந்த வழக்கை வெளியில் தெரியாமல் மறைத்து வந்துள்ளார். அதிமுக அலுவலகத்தில் சிவி சண்முகம் எம்பி இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததை அடுத்தே, காவல்துறையினர் இது தொடர்பான பத்திரிகை செய்தியை முன்வந்து வெளியிட்டனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்தவரா? காவல்துறை மறுப்பு: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜானகிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறிய சிறுமியின் தந்தை ஐஸ் விற்பனை செய்து வந்ததாகவும், வாடகை வீட்டில் இருந்த போது வீட்டு உரிமையாளரின் மகன், பெண் குழந்தைக்கு முதலில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், பின்னர் தனது நண்பர்களை கூட்டுக்கு சேர்த்து தொடர்ந்து இந்த பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்பெண் குழந்தையின் பூர்வீகம் தமிழ்நாடு தான், வடமாநிலம் இல்லை என்று காவல்துறையினர் உறுதியாக தெரிவித்திருந்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.