தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, மிக்ஜாம் புயலால் மிகுந்த பாதிப்பிற்குள்ளான சென்னை மசூதி பள்ளம், திவான் பாஷ்யம் தெரு, வாணிபர் தெரு, ஜெயராம் தெரு, கவரை தெரு, இளையாழ்வார் கோயில் தெரு, சுப்பிரமணிய சாலை, தாடிரெத்தினம் தெரு, கம்பர் தெரு, பாலகிருஷ்ணா தெரு, சைதை சம்பந்தன் தெரு, நேரு நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 9000 குடும்பங்களுக்கு இன்று ஆளுக்கு தலா 5 கிலோ அரிசி, பெட்சீட் மற்றும் பிஸ்கட் ஆகிய நிவாரணப் பொருட்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். உடன் மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் உள்ளனர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






