அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்: புதுச்சேரி ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுச்சேரி:
பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: “புதுச்சேரியில் கடந்த ஓராண்டாக கரோனா பரவல் இல்லை. கடந்த சில வாரங்களாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கரோனா ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காரைக்காலில் 3 தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் பலி ஆனார். புதுச்சேரியில் பரிசோதிக்க கூடிய நோயாளிகளில் நோய் தொற்று இருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் உள்ளது.
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமுள்ளது. எனவே புதுச்சேரி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சந்தை, பூங்கா, திரையரங்குகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு பொருந்தும்.
பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் அறைகள் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சானிடைசர் வைக்கப்பட வேண்டும். முக்கியமாக கல்வி நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். தேர்வில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். கரோனா முந்தைய காலத்தில் அறிவுறுத்திய நடைமுறைகள் தற்போதும் பொருந்தும்.
புதுச்சேரியில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் படி முகக்கவசம் பொதுமக்கள் அணிய வேண்டும். அப்படி அணியாவிட்டால் அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும். புதுச்சேரியில் 36 பேரும், காரைக்காலில் 34 பேரும், ஏனாமில் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாஹேயில் யாருக்கும் பாதிப்பில்லை” என ஆட்சியர் கூறினார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை