சென்னை:
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் இன்று (11.8.2026) சென்னை மத்திய புறநகர் ரயில் நிலையத்தில் “போதைப்பழக்கத்திற்கு எதிராக” பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
சென்னை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் இன்று (11.8.2026) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பாக மத்திய சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற “போதைப் பழக்கத்திற்கு எதிரான” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் போதைப்பழக்கத்திற்கு எதிரான போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பில் கலந்து கொண்டு, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து உதவி ஆணையர் கலால் பி. ஃபெர்மி வித்யா, புறநகர் நிலைய மேலாளர் மஞ்சுநாதன், நிலைய மேலாளர் டி.ஏ. கமலேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர். அவரைத் தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர்கள், பிற துறை உயர் அலுவலர்கள், திருநங்கையர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியின் மேலும், ஒரு பகுதியாகப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையில் புகைப்படப் மையம் அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன், போதைப் பழக்கத்திற்கு எதிரான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

போதைபொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: சென்னை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சென்னை:சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் இன்று (11.8.2026) சென்னை மத்திய






