மதச்சார்பற்ற ஜனதா தளத்தை அணுகிய பாஜக மற்றும் காங்கிரஸ்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதால் பாஜகவும் காங்கிரசும் தங்களை அணுகி உள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.22 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு தொடர் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தலில் வாக்களித்தவர்களிடம், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என கேட்டு எடுக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிகளில் பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சில கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், சில கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவித்துள்ளன. எனினும், அந்த எண்ணிக்கையும் அக்கட்சிகளுக்கு நம்பிக்கைக் கொடுப்பதாக இருக்கவில்லை. 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் குறைந்தபட்சம் 113 தொகுதிகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே ஆட்சி அமைக்க முடியும். எனினும், காங்கிரஸ், பாஜக இரண்டும் ஏறக்குறைய 100 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் தங்களை அணுகி உள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது. .

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.