மதிமுகவின் பொதுச் செயலராக வைகோ மீண்டும் தேர்வு :

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

”மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் 61 மாவட்டங்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கிளைக், வட்டக், பேரூர், நகரக், ஒன்றியக், பகுதிக், மாவட்டக், மாநகர் மாவட்டம் போன்ற கழகங்களில் அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டன.

நிறைவாக தலைமைக் கழக நிர்வாகிகள், ஆட்சிமன்றக் குழு, தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் 27.05.2023 அன்று வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களைப் போட்டியிடுபவர்கள் 01.06.2023 அன்று தலைமைக் கழகம் தாயகத்தில் தாக்கல் செய்தார்கள். இன்று 03.06.2023 பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. எவரும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவில்லை. எனவே, வேட்புமனு வழங்கியவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

14.06.2023 அன்று சென்னை, அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் கூடும் கழகத்தின் 29-ஆவது பொதுக்குழு இந்த நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும். அங்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை முறைப்படி அறிவிக்கப்படும். மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு வைகோ, அவைத் தலைவர் பொறுப்பிற்கு ஆடிட்டர் அ.அர்ஜூனராஜ், பொருளாளர் பொறுப்பிற்கு மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் பொறுப்புக்கு துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு மல்லை சி.ஏ.சத்யா, ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா சேக் முகமது ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு டாக்டர் சி.கிருஷ்ணன், ராணிசெல்வின், கே.ஏ.எம்.நிஜாம், கழககுமார், ஜெய்சங்கர், மதுரை சுப்பையா, பூவை பாபு ஆகியோரும், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு வழக்கறிஞர் அருணாசலம், வழக்கறிஞர் நாமக்கல் பி.பழனிச்சாமி, வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், வழக்கறிஞர் பாசறை பாபு, பரமக்குடி கே.ஏ.எம்.குணா, மதுரை பி.ஜி.பாண்டியன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள்” என கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.