“மத்திய கிழக்கில் இந்தியா பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது”

அமெரிக்க இதழான பாரின் பாலிசி கட்டுரை விளக்கம்

சென்னை, ஜூலை 1
மத்திய கிழக்கில் இந்தியா ‘பெரிய சக்தியாக’ உருவெடுத்துள்ளதை அமெரிக்க இதழான ‘ஃபாரின் பாலிசி’ கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.
உலகளாவிய விவகாரங்களில் கவனம் செலுத்தும் அமெரிக்கப் பத்திரிகையான ஃபாரின் பாலிசியில் ஒரு கட்டுரை, மத்திய கிழக்கில் இந்தியா ஒரு “முக்கிய நாடாக“ உருவெடுத்துள்ளதை, பிராந்தியத்தின் மிகவும் சுவாரஸ்யமான புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள ஆழமான, வளர்ந்து வரும் உறவுகளை இது எடுத்துக்காட்டுகிறது. இப்பிராந்தியத்தில் இந்தியாவுக்கான இடம் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது. இந்தியாவுடன் உறவு வைத்துக்கொள்ள இந்த நாடுகள் விருப்பமும், ஆர்வமும் கொண்டுள்ளதாக அது கூறுகிறது.
இந்த நிகழ்வு பற்றி அமெரிக்கா எதுவும் செய்வதிற்கில்லை என்பதுடன், முரண்பாடான வழியில் கூட பயனடைய வாய்ப்பில்லை என்று கட்டுரை ஆசிரியர் ஸ்டீவன் ஏ குக் வாதிடுகிறார். “அமெரிக்காவின் மத்திய கிழக்கு கூட்டாளி நாடுகள் அந்நாட்டுக்கு மாற்றுதேட விரும்பினால், அதில் இந்தியா சிறந்தத் தேர்வாக இருக்கும்’’
“அமெரிக்கா இனி இப்பகுதியில் இணையற்ற ஆதிக்க சக்தியாக இருக்கமுடியாது. மத்திய கிழக்கில் இந்தியா தனது இருப்பை விரிவுபடுத்தும் வரை, ரஷ்யாவோ அல்லது சீனாவோகூட அந்த இடத்துக்கு வர முடியாது,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர், கட்டுரை ஆசிரியர் இந்தியாவுக்கு வந்த போது, இந்தியர்கள் மத்திய கிழக்கில் ஒரு பெரிய பங்கை வகிக்க விரும்பவில்லை என்று கருதியதை நினைவு கூர்ந்துள்ளார். தனது பயணத்தின் 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது என்று அவர் இப்போது கூறுகிறார்.
“அமெரிக்க அதிகாரிகளும் ஆய்வாளர்களும் சீனா எடுக்கும் ஒவ்வொரு ராஜதந்திர நடவடிக்கைகளிலும், மத்திய கிழக்கில் சீன முதலீட்டை சந்தேகத்துடன் கண்காணித்து வந்த அதே நேரத்தில், இப்பிராந்தியத்தில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது என்ற மிகவும் சுவாரஸ்யமான புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றை அமெரிக்க பல ஆண்டுகளாக கவனிக்கத் தவறிவிட்டது” என்று குக் எழுதியுள்ளார்.
வளைகுடாவைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகியவை இந்தியாவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகளை தீவிரமாகத் தேடி வருகின்றன என்று கட்டுரை கூறுகிறது. இரு நாடுகளும், குறிப்பாக, நீண்ட காலமாக பாகிஸ்தானுடன் உறவு வைத்திருக்கும் சவூதி அரேபியா இதில் இணைந்திருப்பதால், இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும், இந்தியாவுக்கான முன்னோக்கு இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒரு பொதுவான ஆர்வத்தில் இருந்து உருவாகிறது. ஆனால் இதில் பெரும்பகுதி பொருளாதாரமும் அடங்கியுள்ளது என்கிறது அக்கட்டுரை.
இந்தியாவிற்கும் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை அது சுட்டிக்காட்டியுள்ளது. இஸ்ரேலுடனான இந்தியாவின் வலுவான உறவுகள் குறித்து குறிப்பிட்டுள்ள கட்டுரை, பிராந்தியத்தில் அந்த நாடு மிகவும் வளர்ந்த நாடு எனக்கூறியுள்ளது.
2017-ம் ஆண்டில் முதல் இந்தியப் பிரதமராகப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குப் பயணம் செய்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்தியா வரும் கவுரவம் கிடைத்தது. அதிலிருந்து, இருநாடுகளுக்கும் இடையிலான இந்த உறவுகள், உயர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்தன.
குறிப்பாக கடந்த காலத்தில், சிறிய சந்தை, சர்ச்சைக்குரிய அரசியல் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் வணிக சமூகம் இஸ்ரேலில் முதலீடு செய்வதிலிருந்து விலகியிருந்தது. இது இனி மாறக்கூடும் என்று குக் கூறுகிறார்.
2022 ஆம் ஆண்டில், அதானிக் குழுமம் மற்றும் ஒரு இஸ்ரேலிய பங்குதார நிறுவனம் சேர்ந்து ஹைஃபா துறைமுகத்திற்கான டெண்டரை 1.2 பில்லியன் டாலர்களுக்கு வென்றுள்ளன. மேலும் இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

“நிச்சயமாக, இந்தியா-இஸ்ரேல் உறவு சிக்கலானதுதான். ஏனெனில், பாலஸ்தீனியர்களுக்கான ஆதரவில் இந்தியா உறுதியாக உள்ளது; ஈரானுடன் நட்புறவில் உள்ளது, அந்நாட்டிலிருந்து இந்தியா கணிசமான அளவு எண்ணெய் வாங்குகிறது; இந்தியாவின் மேல்தட்டு மக்கள், காலனித்துவ அனுபவத்துடனேயே இஸ்ரேலைக் காண முனைகின்றன “ என்று கட்டுரை மேலும் கூறுகிறது.
மோடியின் சமீபத்திய இரண்டு நாள் எகிப்துப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், எகிப்திய-இந்திய நட்புறவில், புதிய அத்தியாயம் மலரந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி இந்தியாவின் 74வது குடியரசு தின கௌரவ விருந்தினராகப் பங்கேற்றதிலிருந்து, ஆறு மாதங்களுக்குப் பிறகு, அண்மையில் மோடியின் பயணம் வரை இருநாட்டு உறவு வலுவடைந்துள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு எல் சிசி மூன்றாவது முறையாக புது தில்லிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனர்களைப் போலவே, இந்தியர்களும் எகிப்தை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு தங்கள் பொருட்களை அனுப்புவதற்கான நுழைவாயிலாகக் கருதுகின்றனர், என கட்டுரை மேலும் கூறிகிறது.
சீனாவுடனான பெரும் வல்லரசு போட்டியின் தோற்றத்தின் மூலம் பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கைப் பார்க்க அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது தூண்டுதலாக இருக்கிறது என்று ஆசிரியர் எழுதியுள்ளார்.மத்திய கிழக்கில் சீனாவைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பாகப் பைடன் நிர்வாகம் இதைக் கருதுகிறது.
மேலும் ஜூன் மாத இறுதியில் மோடியின் வாஷிங்டன் பயணம் ஒரு நட்புறவு விழாவாக இருந்தது, இதில் அவரது இரவு உணவு மற்றும் நாடாளுமன்றக் கூட்டு அமர்வில் உரையாற்றுவதும் அடங்கும்,” என்று அது கூறியுள்ளது.
அமெரிக்க-இந்திய உறவுகளின் அனைத்து நேர்மறையான அதிர்வுகளுக்கும் இடையே, அமெரிக்கா கற்பனை செய்யும் உத்திபூர்வ பங்காளியாக இந்தியா விரும்புவது சாத்தியமில்லாததாக தோன்றுகிறது என குக் வாதிடுகிறார்.
மத்திய கிழக்கைப் பொறுத்தவரை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் குறித்த கருத்திலிருந்து இந்தியா கடுமையாக வேறுபடுகிறது, மேலும் மத்திய கிழக்கிற்கான இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளின் விரிவாக்கம் என்ன என்பது பற்றிய எதிர்பார்ப்புகளை அமெரிக்கா குறைக்க வேண்டும் என்று கட்டுரை கூறுகிறது.
“அமெரிக்காவுடன் இந்தியா அணிசேர்வது சாத்தியமில்லை, ஆனால் சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் செய்ததைப் போல அமெரிக்கா உறவை இந்தியா முறிக்கவும் வாய்ப்பில்லை” என்று அது கூறியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்தியாவின் அதிகாரத்தைத் தீவிரமாகக் கணிக்க வேண்டிய நேரம் இது என்று கட்டுரை கூறுகிறது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

“மத்திய கிழக்கில் இந்தியா பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது”

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்