மத்திய பா.ஜ.கா ஆட்சி சாதனை அல்ல வேதனை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்…

மயிலாடுதுறையில் திமுகவின் பாகமுகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், “மத்திய பாசிச பாஜக அரசு என்ன செய்துகொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் தொலைக்காட்சிகளிலோ நாளிதழ்களிலோ பார்த்திருப்பீர்கள். தொடர்ந்து ஐ.டி ரெய்ட், ஈ.டி ரெய்ட், சிபிஐ என திமுகவை அச்சுறுத்த முயல்கின்றனர். திமுகவினர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே பார்த்தவர்கள். இந்த ஈ.டிக்கும் மோடிக்குமா நாம் பயப்படப் போகிறோம். நம்மைப் பார்த்து ஏன் அவர்கள் பயப்படுகிறார்கள் என்றால், இந்தியாவெங்கும் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளை முன்னால் நின்று செய்து வருபவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால் தான் பாஜகவிற்கு திமுகவைப் கண்டால் பயம் வருகிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை நிறுவியது போல் திராவிட மாடல் ஆட்சியை ஆரிய மாடலாக மாற்றும் நினைக்கும் பாஜகவின் முயற்சி தமிழ்நாட்டில் பலிக்காது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மயிலாடுதுறையில் இன்றே துவங்கிவிட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை விரட்டியது போல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் எஜமானர்களை ஓட ஓட விரட்ட நாம் கழகத்தினர் பாடுபட வேண்டும். பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை பாஜக அமைச்சர்கள் தமிழ்நாட்டில் நடத்துவது சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அல்ல. அது 9 வருட வேதனை” எனக் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒட்டுமொத்த தமிழகமும் பாஜகவை எதிர்க்கிறது. ஒருபோதும் பாஜகவை தமிழ்நாடு ஏற்காது. திமுகவாக இருக்கட்டும், தமிழ்நாட்டு மக்களாகட்டும், தொடர்ந்து பாஜகவை எதிர்த்துக்கொண்டே தான் இருப்பார்கள்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.