மத்திய மந்திரி வீடு பெட்ரோல் குண்டுகள் வீசி எரிப்பு – மணிப்பூரில் பரபரப்பு…….

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையிலான மோதல் வன்முறையாக வெடித்து இன்னும் ஓயாமல் நீடிக்கிறது. கடந்த மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அதில் இருந்து தற்போது வன்முறை ஓயவில்லை.

ஆயுதமேந்திய குழுக்கள் மீது கடும் நடவடிக்கை, 144 தடை உத்தரவு பிறப்பித்தும் அவ்வப்போது வன்முறை நடைபெறுகிறது. இம்பாலில் தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நேரத்திலும், நேற்று பெண் மந்திரி வீட்டுக்கு ஒரு கும்பல் தீவைத்தது. இந்த நிலையில் நேற்றிரவு மத்திய மந்திரி ஆர்.கே. ரஞ்சன் சிங் வீட்டை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தீவைத்து கொளுத்தினர். சம்பவம் நடைபெற்றபோது மத்திய மந்திரி ரஞ்சன் அங்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மந்திய மந்திரி ரஞ்சன் கூறுகையில் ”நேற்று இரவு நடைபெற்ற சம்பவங்களை பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் எனது வீட்டை எரித்துள்ளனர். தரைத்தளம் மற்றும் முதல் தளம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் எனது குடும்பத்தை சேர்ந்த எவரும் அந்த நேரத்தில் அங்கு இல்லை. வன்முறை எதற்கும் தீர்வாகாது. இந்தச் செயலில் ஈடுபடுட்டவர்கள் மனிதகுலத்திற்கு எதிரிகள்” என்றார். கடந்த மே மாதம் இதுபோன்று அவரது வீட்டை தாக்க கும்பல் முயன்றது. அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாகும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.