மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த வழக்கு – நீதிமன்றம் அதிரடி கேள்வி!

ஒரே மாதிரியான படிப்பை படிக்கும் நிலையில் கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில், இந்த வழக்குகளின் இறுதி விசாரணை இன்று துவங்கியது.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தும் போது, 31 சதவீத பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

நீட் தேர்வை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த இட ஒதுக்கீடு உள்ளதாக மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என வாதிட்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்ததால் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்றும், அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் யார்? சமுதாயத்தில் எந்த பிரிவினர்? என்பதை ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே இச்சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஒரே மாதிரியான படிப்பை படிக்கும் நிலையில் கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா எனவும், அப்படியானால் அரசியல் சட்டத்தை மீண்டும் எழுத வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ஒரே படிப்பை படித்தாலும், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ படிப்பில் நுழைகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் எனவும், கட்டமைப்பு சமநிலையற்ற நிலையை கருதி தான் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றும் விளக்கினார். இந்த வழக்குகளில் வாதங்கள் தொடர்ச்சிக்காக விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத