அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முடித்துவைப்பு…. அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்… நீதிமன்றம் அதிரடி… பொதுச் செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி

சென்னை:
அதிமுக பொது செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் வழக்குகளை தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு, கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் குரு கிருஷ்ணகுமார் வாதிடும்போது, 2017ல் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்காலம் 2026 டிசம்பர் வரை உள்ளது. பொதுச்செயலாளர் பதவி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே வகிக்க கூடிய வகையில் விதிகள் உள்ளது. தேர்தல் ஆணையம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளையே அங்கீகரித்துள்ளது. இவர்களுக்கு மட்டுமே கட்சியில் அதிகாரம் உள்ளது. இந்த நிலையில் எந்த தேவையும் இல்லாமல் பொதுசெயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது கட்சி விதிகளுக்கு முரணானது என்றார்.
மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்காததால், இன்றைய தேதி வரை இடைக்கால பொது செயலாளர் என்ற பதவி என்பதே இல்லை. எந்த காரணமும், எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் கட்சியிலிருந்து மனுதாரரை நீக்கியுள்ளனர். ஒற்றை தலைமை வேண்டும் என்று பெரும்பான்மையினர் விரும்பினாலும் அதை ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்தே முடிவெடுக்க முடியும் என்றார்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் இன்று நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்கினார். அவர் வழங்கிய தீர்ப்பில், ‘ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்.பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வதை நீக்கியது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும். ஆகவே ஓ பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையில்லை அதே சமயம் ஓ பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கிறோம்..’இவ்வாறு தெரிவித்தார். உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராகிறார்.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்