தமிழக முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றிய முதல்வர் ஐஏஎஸ் அதிகாரிகளையும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு;

நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்

முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம்

ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்

சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்

சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம்

உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்

பொதுப்பணித்துறை செயலாளர் டாக்டர் மணிவாசன், சுற்றுலா இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக நியமனம்

பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த கே. நந்தகுமார் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக நியமனம்
நந்தகுமார் வகித்துவந்த பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம்







