அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்வர் பிரேன் சிங் தகவல் – மணிப்பூரில் குழப்பமான சூழலே நீடிக்கிறது……

மணிப்பூரில் நிலைமை இன்னும் குழப்பமாகவே இருக்கிறது என்றும், வடகிழக்கு மாநிலத்தில் வன்முறையின் தன்மை மாறிவருவது குறித்து உள்துறை அமைச்சர் கவலை தெரிவித்ததாகவும் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் கூறினார்.

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிப்பத்தற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடந்ததற்கு அடுத்த நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரேன் சிங் தெரிவிக்கையில், “புறநகர்களில் நடக்கும் துப்பாக்கிச்சூடு முதல் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து வரும் கலவரங்கள் வரை வன்முறையின் தன்மை மிக கடினமாக மாறி வருவது பற்றி மத்திய உள்துறை அமித் ஷாவை கவலை தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன்சிங், மாநில அமைச்சர் சுசிந்ரோ மைத்தி வீடுகள் மீதான தாக்குதல், தொடர்ந்து நடைபெறும் தீவைப்பு மற்றும் பொதுச் சொத்துகளை அழிக்கும் சம்பவங்கள், பாதுகாப்பு படையினரின் நடமாட்டத்துக்கான இடையூறு போன்றவை குறித்து உள்துறை அமைச்சர் கேட்டறிந்தார்.

வன்முறையின் தொடக்கம் அரசியல், உணர்வு நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால், தற்போது என்ன நடக்கிறது என்று கூற முடியாதபடி நிலைமை குழப்பமாக உள்ளது. மாநிலத்தில் அமைதி நிலைநாட்டவும், இயல்பு நிலை திரும்பவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சரிடம் நான் அளித்துள்ளேன்”. என்று முதல்வர் தெரிவித்தார்.

மணிப்பூரில் மாநில போலீஸாரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் உருவாக்கியிருந்த 12 பதுங்கு குழிகளை அழித்ததாக கூறியதைத் தொடந்து வந்துள்ள முதல்வரின் கருத்து மிகவும் கவனம் பெறுகிறது.

முன்னதாக, மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலேசானை நடத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சனிக்கிழமை மாலை அனைத்துகட்சி கூட்டம் நடந்தது. நான்கு மணிநேரம் வரை நடந்த இந்தக் கூட்டத்தில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், அனைத்துக் கட்சிக் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கையாக எழுப்பின.

இந்தக் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், சிவசேனா (யுடிபி), திரிணமூல் காங்கிரஸ், மிசோ தேசிய முன்னணி, பிடிஜே, அதிமுக, திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன.

மணிப்பூரில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றார். மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதற்காக நான்கு நாட்கள் தங்கியிருந்து குகி மற்றும் மைத்தி இன மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இருந்தாலும் அங்கு இன்னும் வன்முறை அதிகரித்து வருகிறது.

மணிப்பூரில் மைத்தி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3-ம் தேதி குகி பழங்குடியினர் அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 144 தடையுத்தரவு பிறபிக்கபட்டுள்ளது உள்ளது. இணைய சேவைகள் தடைசெய்யப்பட்டன. மாநிலத்தில் முழுமையாக இணைய சேவை இன்றும் வழங்கப்படவில்லை.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை