முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் – ஐஐடி மெட்ராஸ் ஆய்வு முடிவுகள்

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, 2040-ம் ஆண்டிற்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் என்று இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) மெட்ராஸ் மேற்கொண்ட ஆய்வில், தெரிய வந்துள்ளது.

2050-ம் ஆண்டிற்குள், உலகளவில், கார்பன் வெளியேற்றத்தில் நிகர-பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது குறித்த விரிவான ஆய்வு முடிவுகளை ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ளது.

28-வது ஐ நா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டின் இலக்குகளை எட்டுவதற்கு, உடனடியாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான முதலீடுகளை, இருமடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும், மின் விநியோகக் கட்டமைப்பு, எரிசக்தி சேமிப்பு மீதான செலவினங்களை,  73 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும், ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தற்போதைய வளர்ச்சி விகிதத்தின்படி, 2050-ம் ஆண்டு வரை, உலகளவிலான எரிசக்தி பயன்பாட்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, புதைபடிவ எரிபொருட்களுக்கு இணையான இடத்தைப் பிடிக்க இயலாது என்ற முக்கியதத்துவம் வாய்ந்த யதார்த்த நிலையை இந்த ஆய்வின் முடிவுகள் உணர்த்துகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிலான முதலீடுகள் தேவைப்படுவதுடன், மிகவும் முனைப்புடன், திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தினால் மட்டுமே, 2040-ம் ஆண்டிற்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும்.

‘டிரான்சாக்ஸன்ஸ் ஆஃப் தி இந்தியன் நேஷனல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங்’ (https://doi.org/10.1007/s41403-025-00556-0) என்ற இதழில், ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவுகளை  வெளியிட்டுள்ளனர். இந்தியா மற்றும் உலகளவிலான தொழில்நுட்ப சவால்களுக்குத் தொடர்புடைய பொறியியல், அறிவியல், நடைமுறை, கொள்கைகள் குறித்த ஆய்வுகள், விமர்சனங்கள், கருத்துகளை இந்த இதழ் மதிப்பாய்வு செய்கிறது.

ஐஐடி மெட்ராஸ் வேதியியல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜித்தேந்திர எஸ்.சங்வாய், முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. ரஜத் தேஹுரி ஆகியோர் இந்த ஆய்வுக் கட்டுரையை இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி குறித்து விளக்கிய ஐஐடி மெட்ராஸ் வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் ஜித்தேந்திர எஸ்.சங்வாய், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாறுவது என்பது சுற்றுச்சூழல் சார்ந்த கட்டாயம் மட்டுமின்றி, அது பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் சார்ந்த ஒன்றாகும். அதற்கான தொழில்நுட்ப வழிமுறைகள்  உள்ளன என்பதை எங்களது ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகிறது. ஆனால், உலக நாடுகள் இதற்குத் தேவையான முதலீடுகளை விரைவாக மேற்கொள்ளவில்லை என்றும், இலக்குகளுக்கும், செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார். தற்போது, நமக்கு நம்பிக்கை மட்டுமின்றி, விரைவான, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் போதிய நிதி வசதியுடன் கூடிய செயல்பாடுகள் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இணை ஆசிரியரும், ஐஐடி மெட்ராஸ் வேதியியல் பொறியியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளருமான திரு. ரஜத் தேஹுரி கூறுகையில், “இந்த பகுப்பாய்வு, கடந்த பத்தாண்டுகளின் உண்மையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான வளர்ச்சி சார்ந்த தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதன் கணிப்புகள் எச்சரிக்கையூட்டுவதாக உள்ளன. முதலீடு, கொள்கை சீர்திருத்தம் மற்றும் மின்கட்டமைப்பு வசதிகளில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த  பத்தாண்டுகளில், முக்கியதத்துவம் வாய்ந்த பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகள் அனைத்தையும் தவறவிடும் சூழல் உள்ளது” என்று தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.