முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பு !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஜெயிலர் படம் இம்மாதம் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. அதற்கான போஸ்டர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென சந்தித்து பேசினார். நாளை காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்துள்ளார். ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழகத்தின் அரசியல் சூழல் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி