மேகதாது அணை கட்டினால் 1 லட்சம் பேருடன் எங்கள் படை அங்கு இருக்கும்: டாக்டர். கி.கிருஷ்ணசாமி

சென்னை:
காவிரியின் குறுக்கே தேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான நதிநீர் பங்கீட்டை வழங்க வலியுறுத்தியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அனைத்து கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி பேசுகையில், இந்த ஆர்ப்பாட்டம் ஏதோ சாதாரணமான ஒரு அரசியல் ஆர்ப்பாட்டம் கிடையாது. தமிழகத்தில் இருக்கின்ற 7 கோடி மக்களுக்கான ஆர்ப்பாட்டம். ஆகஸ்ட் 1ம் தேதி 28 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்நத ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதைவிட அதிகமான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய, ஏறக்குறைய 100 ஆண்டுகளாக இருந்து வருகின்ற காவிரி விவகாரம் தான். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு ஏற்கனவே அமராவதி, ஹேரங்கி, கிருஷ்ணசாகர், கபனி அணைகளை கட்டிக் கொண்டுள்ளனர். இப்போது மேகதாது அணை கட்டப்போகிறார்கள். இந்த அணை கட்டினால் தமிழகத்திற்குள் வரும் உபரி நீர்கூட வந்து சேறாது. அன்றைய காலக்கட்டத்தில் தமிழர்கள் எழுச்சிபெறவில்லை. தற்போது தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிகூட செய்ய முடியவில்லை.10 லட்சம் ஏக்கர் நிலப்பறப்பில் செய்யக்கூடிய நெற்சாகுபடி செய்யப்படவில்லை. காவிரி மேலாண் வாரியம் மே மாதம் 9.2 டிஎம்சி தண்ணீரும், ஜூன் மாதம் 12 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதம் 24 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கான தண்ணீரை வழங்கவில்லை.
தமிழக முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும். ஜூன் மாதம் 1ம் தேதியே தண்ணீர் வரவில்லை என்றதும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டாமா? உச்சநீதிமன்றத்¬ அணுகியிருக்க வேண்டாமா? காவரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அணுகியிருக்க வேண்டாமா? எதுவுமே செய்யவில்லையே. கர்நாடகாவில் முதல்வர் சிவக்குமார் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். பாஜக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்றன. ஒரு புள்ளியில் நதிநீர் விவகாரத்தில் அனைவரும் இணைந்தனர். அதே நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும். முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினால் கர்நாடக அரசு பார்வைக்கும், மத்திய அரசின் பார்வைக்கும் செல்லும். அப்போது தான் மேகதாது அணை விவகாரத்திற்கு ஒரு பதில் கிடைக்கும். அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்வர் விஜய் கூட்டத் தயங்குகிறார் என்றால் ஏதோ அச்சம் வருகிறது என்று பொருள். எதற்காகவோ தமிழகத்தின் உரிமையை நீங்கள் விட்டுக் கொடுக்க தயாராகி விட்டீர்கள் என்று பொருள். சட்டமன்றத்திலே இருக்கின்ற எதிர்க்கட்சிகள் பேசாமல் இருக்கலாம். ஆனால் உண்மையான எதிர்க்கட்சிகள் இந்ததான் இருக்கின்றன. நாங்கள் ஒரு முடிவு செய்துவிட்டால் அதில் இருந்து பின்வாங்க மாட்டோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கர்நாடக அரசுக்கு நாங்கள் கூற விரும்புவது என்னவென்றால் மேகதாது அணைக்கு ஒரு செங்கல் வைத்தால் கூட ஒரு லட்சம் பேருடன் எங்கள் படை வரும். இன்றோரு மேகதாது அணை மீது கை வைப்பதை மறந்துடுங்க. சட்ட ரீதியாக நிரந்தரமான ஒரு தீர்வு வரவேண்டும். மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டை விட்டுவிட்டு காவிரி விவகாரத்தில் நிலையான சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசு அனுமதித்தாலும், மாநில அரசு தூங்கிக் கொண்டிருந்தாலும் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை தமிழக மக்கள் விடக்கூடாது என்றார்.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று எம்.பி.க்கள் கூட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை,தமிழ்நாடு முதல்-வர் விஜய் தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை அ.தி.மு.க.

மேகதாது அணை கட்டினால் 1 லட்சம் பேருடன் எங்கள் படை அங்கு இருக்கும்: டாக்டர். கி.கிருஷ்ணசாமி

சென்னை:காவிரியின் குறுக்கே தேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான

காவிரி விவகாரம்: ஆளும், எதிர்க்கட்சிகள் கூட கூட்டாத அனைத்துக்கட்சி கூட்டத்தை நாங்கள் கூட்டியுள்ளோம்: முன்னாள் எம்எல்ஏ தனியரசு

சென்னை:காவிரியின் குறுக்கே தேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக