பெருநகர சென்னை மாநகராட்சி, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
இராயபுரம் மண்டலம், வார்டு-57க்குட்பட்ட யானைக்கவுனி பகுதியில் ரூ.71.26 கோடி
மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில்
முடிவுற்ற ஒருவழிப் பாதையினை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை
அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. தயாநிதி மாறன் அவர்கள் நேற்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-57ல் அமைந்துள்ள
யானைக்கவுனி மேம்பாலமானது சென்ட்ரல் இரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ்
இரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதைகளுக்கு மேல் அமைந்துள்ளது. இந்தப் பாலம் வால்டாக்ஸ் சாலையையும், இராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாகும். இப்பாலம் மிகவும் பழமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இப்பாலத்தில் 50 மீ. நீளமுள்ள பகுதி இரயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டுவந்தது. தற்பொழுது, இந்தப் பகுதியை இடித்துவிட்டு 156.12 மீ. அளவிற்கு இரயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இருபுறமும் 364.23 மீ. அளவிற்கு சாய்தள சாலை பெருநகர சென்னை மாநகராட்சியாலும் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதனடிப்படையில், வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீ. மற்றும் இராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீ. நீளத்திற்கு சாய்தள சாலை மாநகராட்சியின் சார்பில் மூலதன நிதியின் கீழ், ரூ.30.78 கோடி மதிப்பிலும், இரயில்வே துறையின் மூலம் ரூ.40.48கோடி மதிப்பிலும் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வால்டாக்ஸ்சாலையிலிருந்து, ராஜா முத்தையா சாலையை சென்றடையும் வகையில் ஒழிவழிப்பாதைமுடிக்கப்பட்டு நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா, இணை ஆணையாளர்(பணிகள்) டாக்டர் ஜி. எஸ். சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் கட்டா ரவி தேஜா, (வடக்கு), கே.ஜெ.பிரவீன் குமார், (மத்தியம்),மண்டலக் குழுத் தலைவர் பி. ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் ராஜேஷ்ஜெயின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





