அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஜினி மகள் வீட்டிலில் திருடி சோழிங்கநல்லூரில் வீடு வாங்கிய பணிப்பெண் கைது

சென்னை:
சென்னை போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்(41) வசித்து வருகிறார். இவர், தனது வீட்டில் லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், தனதுவீட்டு பணிப்பெண்களான ஈஸ்வரி,லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள், கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி என்பவரின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது போலீசாருக்கு தெரியவந்தது.இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (40), அவரது கணவர் அங்கமுத்து ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறுகையில், “ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்டுகளாக வேலை செய்து வந்த ஈஸ்வரி, நகை இருக்கும் லாக்கரின் சாவியை ஐஸ்வர்யா எங்கு வைப்பார் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார். முதலில் சிறிதளவு நகைகளை லாக்கரில் இருந்து திருடியுள்ளார். இதை ஐஸ்வர்யா வீட்டில் யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து, திருவேற்காடு மனசுரா கார்டனை சேர்ந்த கார் ஓட்டுநர் வெங்கடேசன்(44) உதவியுடன் ஈஸ்வரி கொஞ்சம், கொஞ்சமாக லாக்கரில் இருந்த நகைகளைத் திருடியுள்ளார். இது 4 ஆண்டுகளாகத் தொடர்ந்துள்ளது. இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு வங்கியிலிருந்து கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் ரூ.95லட்சத்துக்கு ஈஸ்வரி வீடு வாங்கியிருக்கிறார். மேலும், அந்த கடனை 2 ஆண்டுகளிலேயே அவர் அடைத்துள்ளார்.
இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரி தாமாகவே வேலையை விட்டு நின்றுள்ளார். அதன் பிறகுதான் ஐஸ்வர்யா லாக்கரை திறந்து பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது தெரிந்து போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்’’ என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரத்தை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை