லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி… தொடர்புடைய அதிகாரிகளையும் கைது செய்ய – மே பதினேழு இயக்கம் வலியுறுத்தல்

மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை அமலாக்கத்துறையை சேர்ந்த அங்கித் திவாரி எனும் அதிகாரி, திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரிடம் மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். அப்போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தமிழ்நாடு ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்செயல், மோடி அரசால் ஏற்கனவே தவறாக பயன்படுத்தப்பட்டு வரும் அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடப்பதையே காட்டுகிறது.சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை, ஒன்றிய அரசை ஆளும் பாஜகவுன் துணை அமைப்பாக செயல்பட்டு வருவதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
பாஜகவிற்கு நன்கொடை வழங்காத பெரு நிறுவனங்களை மிரட்டி பணம் பரிப்பதற்கும், மோடி அரசினால் அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. லஞ்சம் ஊழலில் திளைக்கும் பாஜகவின் எம்பி எம்எல்ஏக்களையோ, பெரு முறைகேடுகளில் ஈடுப்பட்ட நிறுவனங்களையோ, மோடிக்கு நெருக்கமான அம்பானி, அதானி போன்றவர்களையோ அமலாக்கத்துறை கண்டுகொண்டதே இல்லை.இப்படி ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவரை அணுகிய அங்கித் திவாரி, கடந்த 2018ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுத்து முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் அலுவலகம் கூறியதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 3 கோடி கேட்டு மிரட்டியுள்ளார்.
பின்னர் திண்டுக்கல் இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து பொறி வைத்து பிடித்துள்ளனர். அங்கித் திவாரி வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை சோதனையிட சென்ற போது, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பின்பு அங்கித் திவாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் மட்டும் சோதனையிட்டுனர். சோதனையின் போதே துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமலாக்கத் துறையின் சென்னை அலுவலகத்தை சோதனையிடக்கூடும் என்று சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தையும் பூட்டி காவல் இருந்துள்ளனர். இதே அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டதை இவ்வேளையில் நினைவுகூர வேண்டும்.
அங்கித் திவாரியின் வாக்குமூலம் மற்றும் தற்போதைய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையையும், சோதனைகளையும் லஞ்ச ஒழிப்புத் துறை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது. அங்கித் திவாரியின் பின்னணியில் செயல்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதோடு, அச்சமின்றி அவர்கள் அலுவலகங்களை சோதனையிட வேண்டும். குறிப்பாக, இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தின் தொடர்பு பற்றிய உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். இதேபோல் இராஜஸ்தானில் இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் 17 இலட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டி பணம் பெரும் போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
எனில், இந்த வலைப்பின்னல் பற்றிய உண்மை கொண்டுவரப்பட வேண்டும்.
அமலாக்கத்துறை புனிதமான அமைப்பு என்பது போன்ற பிம்பத்தை அண்ணாமலை, நாராயணன் போன்ற பாஜகவினர் உருவாக்கி, அவர்களுடைய நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிவித்து வந்துள்ளனர். இது அமலாக்கத்துறைக்கும் பாஜகவுக்கும் உள்ளார்ந்து இருக்கும் தொடர்பை காட்டுகிறது. எனில், இது போன்ற மிரட்டி லஞ்சம் பெறுவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகளை பாஜகவினர் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இலஞ்சம் ஒழிப்புத்துறை இதனையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பாஜகவின் மூத்த தலைவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
ஒன்றிய மோடி அரசினால் ஏவல்துறையாக பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை தனது தனித்தன்மையை இழந்ததன் மூலம் லஞ்சமும் ஊழலும் திளைக்கும் துறையாக மாறியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை கலைக்கப்பட வேண்டும். அதிகார குவிப்பை மேற்கொள்ளும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படும் வரை இதுபோன்ற ஒவ்வொரு நிறுவனமும் சீரழிக்கப்படும். பாசிசத்திற்கு துணைபோகும் துணை அமைப்புகளாக மாறுவதற்கு முன்பு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.