திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகேயுள்ள வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் பிரதீப்குமார் (வயது 36). இவர் சென்னை தனியார் வங்கியில் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் ஸ்ரீதேவிகுப்பம் பெட்ரோல் பங்கு அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுது. இதனையடுத்து பலத்த காயம் அடைந்த பிரதீப்குமாரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கத்தியால் வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






