வண்டலூரில் ரூ.30.89 கோடியில் புதிய குடியிருப்புகள்: மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் மிஷ்ரா திறந்தார்

செனனை: சென்னை வண்டலூருக்கு அருகிலுள்ள, தேசியப் பாதுகாப்பு படையின் (என். எஸ்.ஜி.) சிறப்பு தீவிரவாத எதிர்த்தாக்குதல் படை (எஸ்.சி.ஜி.) 27வது படைப்பிரிவினருக்கு புதிதாக ரூ.30.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 64 வீடுகள் கொண்ட குடியிருப்பை மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா திறந்து வைத்தார்.
அப்போது தேசியப் பாதுகாப்பு படைவீரர்க ளிடையே பேசுகையில், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பில் கடந்த 39 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வரும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்த அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இன்று உலகளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வேளையிலும் புதுப்புது தொழில்நுட்பங்கள் மூலம் அவற்றை முறியடிக்க அனைத்து வழிகளிலும் எப்போதும் தயாராக இருக்கும் வீரர்களின் பணியை வெகுவாகப் பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபிறகு நமது பாதுகாப்பு படை வீரர்களுக்கான நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரித்துள்ளது. நாட்டுக்காக பாடுபடும் வீரர்களின் குடும்பங்களின் நலனை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது வீரர்கள் நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறார்கள்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டிலுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி தரமான மருத்துவ சிகிச்சை பெற முடியும்.
பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தேசியப் பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ராணுவ வீரர்கள் பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையைப் போலவே தேசியப் பாதுகாப்பு படை மற்றும் மத்திய ஆயு தக்காவல் படை வீரர்களும் தீவிரவாத எதிர்ப்பு தாக் குதல்களில் ஈடுபடும் பொழுது ஊனம் அல்லது உயிரிழப்பு நேரிட்டால் அவர்களுக்கும் நிவாரணம் வழங்க பாரத் வீர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
சிறப்பு தீவிரவாத எதிர் தாக்குதல் படையினரின் ஆயுதங்களின் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் ட்ரோன்கள் உள்பட ரிமோட் மூலம் இயக்கப்படும் வெடி குண்டு கண்டுபிடிக்கும் வாகனங்களின் செயல்பாடுகள் மற்றும் வெடி மருந்துகளை கண்டுபிடிக்கவும் அவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபடும் வீரர்கள் உடுத்தும் உடையின் குளிர்சாதன வசதி மற்றும் காற்றோட்ட வசதிகள் உள்பட நவீன ஆயுதங்களின் துல்லியமான செயல்பாடுகளையும் கேட்டறிந்தார்.
மேலும் அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை பின்பற்ற வலி யுறுத்தும் வகையில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனர் எம்.ஏ.கணபதி மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச