வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க சட்டவிரோத மின்வேலிகள் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:
சட்டவிரோத மின்வேலிகள் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 5 காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. அவற்றை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு இருந்தது. இந்த நிலையில், காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வனவிளங்குகள் நுழையாமல் தடுப்பதற்காக விவசாயி முருகேசன் என்பவர் மின்வேலி அமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சுற்றிக்கொண்டிருந்த 3 காட்டுயானைகள் தவறுலாக மின்வேலியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இதனால் விவசாயி முருகேசன் கைது செய்யபட்டார். இந்நிலையில், நெல்லையை சேர்ந்த வின்சென்ட் என்பவர் வன விலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படுவதை தடுக்க சூரிய மின்சக்தியால் இயங்கக் கூடிய மின்வேலிகள் அமைக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் சட்டவிரோத மின்வேலிகள் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து சுற்றுசூழல், வனத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை