விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில் – முழு விவரம் இதோ!

நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் இரண்டு புதிய சாதனைகளை படைத்தார். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ்  வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய தொடக்க ஆட்டக்காரர், சுப்மன் கில் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது ‘கன்னி’ சதத்தை நிறைவு செய்தார். அவரது சரவெடியான பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் 200-ஐ எளிதில் கடந்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 126 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனை அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே நிலைகுலைந்தது. நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் வெறும் 66 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றதோடு டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நேற்றைய போட்டியில் சுப்மன் கில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். அதாவது, விராட் கோலி கடந்த ஆண்டு ஆசிய கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் எடுத்ததே, சர்வதேச 20 ஓவர் போட்டியில் இந்தியர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. அதை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். அத்துடன் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்தியராக சாதனை பட்டியலில் இணைந்தார். ஏற்கனவே சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகிய இந்தியர்கள் இச்சாதனையை படைத்துள்ளனர்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.