அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை வீழ்ச்சி எதிரொலி: பயிரிடப்பட்ட தக்காளியை டிராக்டர் மூலம் அழிக்கும் விவசாயிகள்

பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த கார்த்திகை மாதத்தில் விதைக்கப்பட்ட தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தக்காளிகளை விளை நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் அழித்து வருகின்றனர்.
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் இதுபற்றி தெரிவிக்கையில், நான் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகிறேன். பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால் தக்காளி பயிர் சாகுபடி செய்தோம்.
கார்த்திகை பட்டத்தில் விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தக்காளி வருகையால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். தக்காளி பயிரிட உழுவதற்கு ரூ.13 ஆயிரமும், நாற்றுக்கு ரூ.26 ஆயிரமும், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரமும், மருந்து மற்றும் உரத்திற்கு ரூ.40 ஆயிரமும் செலவாகிறது.
தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு 3 ரூபாயும் செலவு ஆகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தக்காளி விவசாயத்தில் உற்பத்தி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் போனது. தக்காளி ஒரு கிலோ ரூ.22க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை